செவ்வாய், 4 மார்ச், 2014

ஈஸ்வர அல்லா தேரே நாம்..........சிவ சேவை செய்யும் வசீம் குலாம் முகம்மது

          குல்மார்க் சிவன் கோயில்

         இறைவனுக்காகவும் , மதத்திற்காகவும், மனிதனை மனிதன் கொன்று குவிக்கும் இக் காலகட்டத்தில், கேட்கவேத் தித்திக்கும் ஒரு சம்பவம்.  கூடவே உண்டாகும் பயத்தையும் தவிர்க்க முடியவில்லை.  தித்திப்பது ஏன் என்பதை முதலில் சொல்லிவிடுகிறேன்.  தீவிரவாதிகளுக்குப் பயந்து பூசாரிகள் எல்லாம் ஓடிப்போன காஷ்மீரில், குல்மார்க் என்னும் இடத்திலுள்ள சிவாலயத்தில் பூஜை செய்யவும், கோயிலைத் திறந்து வைத்து பக்தர்களுக்கு சிவதரிசனம் கிடைக்கப் பெற உதவவும், ஆளில்லாத நிலை ஏற்பட்டு, அக் கோயில் நீண்டகாலம் அடைபட்டுக் கிடந்தது.

ராஜா ஹரிசிங்க்


          "ஈஸ்வர அல்லா தேரே நாம் (எல்லாம் வல்ல இறைவா, ஈஸ்வரன் என்பதும் அல்லாஹ் என்பதும் உன் பெயர்தானே!) என்ற உண்மையை உணர்ந்ததால் வசீமின் தாத்தா கோயிலைத் திறந்து, பக்தர்கள் சிவபிரானை வழிபட உதவ முன்வந்தார்.  1915 ல், காஷ்மீரை ஆண்ட கடைசி மன்னரான ஹரிசிங்கின் மனைவி மோஹினி பாய் சிசோடியாதான் "பூக்களின் பாதை" எனும் அர்த்தம் கொண்ட குல்மார்க் என்னும் இடத்திலுள்ள இந்த சிவன் கோயிலைக் கட்டியவர்.  1947 க்குப் பின் காஷ்மீரில் பிரிவு வாதப் பிரச்சினைகள் தொடங்கியதால், கோயில் பராமரிப்பு மிகவும் சிரமம் மிக்கதாக மாறியது.  அச் சமயத்தில்தான் வசீமின் தாத்தா, கோயிலைப் பாதுகாக்கவும், பராமரிக்கவும் முன்வந்தார்.  அதன் பின் வசீமின் தந்தை முகமதுவும், தன் தந்தையின் பாதையைத் தொடர்ந்து, சிவ சேவை செய்ய முன்வந்தார்.  இடையே தீவிரவாதிகளால் முகம்மதுவுக்கு ஏராளமான பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அவர் தம் கடைமைகளைச் செய்வதிலிருந்து பின்வாங்கவில்லை.


         24 வயதான, 3 ஆம் தலைமுறையச் சேர்ந்த வசீம், தெமோகா எனும் தன் கிராமத்திலிருந்து, தினமும் அதிகாலை குல்மார்க் வந்து, காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கோயிலுக்கு வரும் பக்தர்களுக்குச் சிவ தரிசனம் கிடைக்கச் செய்வதோடு, காலையிலும், மாலையிலும், சிவபகவானுக்குத் தீபாராதனையும் செய்கிறார்.  கோயிலின் பராமரிப்பு, ராஜா ஹரிசிங்கின் மகனான கரண்சிங்கின் தலைமையில் இயங்கும் "தர்மார்த் ட்ரஸ்ட்" ஆல் மேற்கொள்ளப்படுவதால் கோயிலைப் பராமரிக்கத் தேவையான உதவிகள் வசீமுக்குக் கிடைக்கிறது.  இந்துக்களும், முஸ்லீம்களும், அயோத்தியிலுள்ள ராமர் கோயிலுக்காக ஆயுதம் ஏந்திப் 'போர்' புரிந்த இந் நாட்டில்தான் இப்படிப்பட்ட சம்பவம்.  அதுவும், தீவிரவாதம் தலைவிரித்தாடும் காஷ்மீரில் நடக்கிறது என்பதை வாசித்ததும் உள்ளம் மகிழ்சியால் துள்ளியது.  மனமெல்லாம் மத்தாப்பு!  மனதில் உண்டாகும் தித்திப்பை விளக்க வார்த்தைகள் கிடைக்காமல் தத்தளிக்கும் நிலை எனக்கு!

          கூடவே தவிர்க்க இயலாத பயமும் உண்டாகத்தான் செய்கிறது.  ஊடகம், மற்றும் முகநூலில், கடந்த சில நாட்களாக நிறைந்து நிற்கும் வசீமை ஆயிரக் கணக்கான மக்கள் மனமார பாராட்டும் போதும், வாழ்த்தும் போதும் வசீம் மற்றும் அவரது குடும்பத்தினரின் நன்மைக்காகப் பிரார்த்திக்கும் போதும், சில மனிதாபிமானமற்ற, மத நோய் பாதித்த மன நோயாளிகளாம் தீவிரவாதிகளின் கண்களில் இச்செய்தி தென்படவும், செவிகளில் இச்செய்தி விழவும் வாய்ப்புண்டு என்பதுதான் அந்தப் பயத்திற்கு காரணம்.  அவர்களால் ஏதேனும் ஆபத்து இந்த மனிதாபிமானமுள்ள, உண்மையான இறையுணர்வு உள்ள வசீமுக்கு ஏற்படுமோ என்ற பயம்தான் மனதில் உண்டாகும் மகிழ்சிக்குத் தடையிடுகிறது.  அப்படி ஏதும் ஏற்படாமல் இருக்க நாம் அனைவரும் ஒன்றாய் இறைவனிடம் வேண்டுவோம்.  நாம் நமக்காகப் பிரார்த்திப்பதை விட மற்றவர்களுக்காகப் பிரார்த்திப்பதற்கு பலன் பன்மடங்கு என்பதால் நாம் எல்லோரும் வசீமுக்கும் அவரது குடும்பத்திற்கும் நன்மை பயக்கவும், இது போன்ற வசீம்களின் எண்ணிக்கை பெருகவும், மதத்தின் பெயரால் மல்லிடுபவர்களின் எண்ணிக்கை குறையவும் வேண்டி பிரார்த்தனை செய்வோம்.  பலன் உண்டாகும்!

இந்த இடுகைக்கு வந்த இரு  நல்ல பின்னூட்டங்கள் அபூர்வமான தகவலுடன்.  நன்றி யோகன், நன்றி அஸ்வின் ஜி!


இதைப் படித்த போது எனக்கு நாதஸ்வர வித்துவான் சேக் சின்ன மௌலானா, செனாய் வித்துவான் உஸ்ரத் பிஸ்மிலா கான் நினைப்பு வந்தது.
சேக் சின்ன மௌலானா திருப்புகழ் வாசித்தால், தனித்துவமான தெய்வீக ஒலி அது.
பிஸ்மிலா கானை காசியில் அவர் இருக்கும் வீடு வசதிக்குறைவாக இருப்பதால், வயது போனதாலும் அவர்
வெளிநாட்டு ரசிகர்கள், தங்களுடன் வந்து கடைசிக் காலத்தைக் குடும்பத்துடன் கழிக்கும் படி கேட்ட போது; பிஸ்மிலா கான் கேட்டாராம், "எல்லாவற்ரையும் தருவதுடன், எனக்கு தினமும் தரிசனம் செய்ய காசி விசுவநாதர் ஆலயத்தயும் கொண்டுவந்து தரமுடியுமா? என்ன? பற்றுதல்.
400 வருட உறவு, அவர் 8 தலைமுறை இக்கோவிலில் சேவகம் செய்துள்ளது.
தெளிந்த பற்று எதிலும் பிரிவைத் தேடாது

Great! I have seen many Muslims maintaining Hindu temples in Kashmir when i visited Amarnath Cave during July 2010. The reasons they say was it belongs to their predecessor of Hindu origin. Hats off.!!!!
I have also mentioned about this in my blog www.vedantavaibhavam.blogspot.in in the series of travellogue on Vaishnodevi and Amarnath Pilgrimage during 2010.

27 கருத்துகள்:

 1. மதம் மதம் என்று மதம் பிடித்து அலைபவர்கள் மத்தியில் ஒரு அபூர்வ மனிதர் அவருக்கு எனது பிரார்த்தனையும் ஒரு ராயல் சல்யூட்டும்

  பதிலளிநீக்கு
 2. ஹரிசிங் புகைப்படத்தை பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். நன்றி. மன்மதராக இருந்தவர் முகம் களையாகத்தான் உள்ளது.

  பதிலளிநீக்கு
 3. +1
  உங்கள் பயம் நியாமானது! மேலும், மதமே இல்லாமல் இருந்தால் உலகம் எவ்வளவு நிம்மய்தியாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
 4. மனிதர் எனும் சொல்லுக்கு, மனிதம் என்பதற்கு இவரும் ஒரு எடுத்துக்காட்டு... மிகவும் போற்றத்தக்கவர்... அறிய வைத்தமைக்கு நன்றி...

  பதிலளிநீக்கு
 5. இன்றைய பகிர்வில்...

  வாசகர்களை நம் தளத்திற்கு வந்து வாசிக்க வைக்க...! - இந்த தலைப்பில் உள்ள விவரங்கள் உங்களுக்கு உதவக் கூடும்... நன்றி...

  Link : http://dindiguldhanabalan.blogspot.com/2014/03/Speed-Wisom-3.html

  பதிலளிநீக்கு
 6. உண்மையான ஆன்மீகவாதி வசீம்தான் !அவர் நீடுழி வாழ பிரார்த்திப்போம் !
  த ம 5

  பதிலளிநீக்கு
 7. pl.visit...என்ன காரணம் என்று தெரியவில்லை ,ஏழாவது வோட் வரவே மாட்டேன் என்கிறது ..நீங்கள் முயற்சி செய்து பாருங்கள் ஜி >>>புருஷன் சாப்ட்வேர் என்ஜீனியர்னா பெருமையா சொல்லிக்கலாம் http://www.jokkaali.in/2014/03/blog-post_4.html

  பதிலளிநீக்கு
 8. Great! I have seen many Muslims maintaining Hindu temples in Kashmir when i visited Amarnath Cave during July 2010. The reasons they say was it belongs to their predecessor of Hindu origin. Hats off.!!!!
  I have also mentioned about this in my blog www.vedantavaibhavam.blogspot.in in the series of travellogue on Vaishnodevi and Amarnath Pilgrimage during 2010.

  பதிலளிநீக்கு
 9. ஆம் அபூர்வ மனிதர்தாம்! தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 10. நல்ல மனிதருக்கு மதங்கள் தடையில்லை என்பதை நிருபித்து வரும் வசிமிற்கு பாராட்டுக்கள்! அவரது சேவை தொடர் இறைவனை பிரார்த்திக்கிறேன்! பகிர்வுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 11. ஆம் நிச்சயம் அபூர்வ மனிதர்தான்
  பதிவாக்கி அறியச் செய்தமைக்கு
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 12. மிக்க நன்றி! தங்கள் கருத்திற்கு! அவரது மனைவி படம் தேயும் கிடைக்க வில்லை!

  பதிலளிநீக்கு
 13. போற்றப்படுபவர்தான்! ஆனால் பயமும் இருக்கிறது! மிக்க நன்றி DD தங்கள் கருத்திற்கு!

  பதிலளிநீக்கு
 14. ஆம் வாசித்தோம் மிக நல்ல பதிவு! அதில் ஒன்றை இங்கு உபயோகப் படுத்தி உள்ளோம் பார்த்திருப்பீர்கள்! இக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 15. பார்த்தோம்! ஜி! 7 வதா என்று தெரியவில்லை1 ஜி! கொஞ்சம் தாமதமாகி விட்டது நேற்று! தங்கள் இடுகை வாசிக்க! அதான்!...

  தொடர்கிறோம்! ஜி

  பதிலளிநீக்கு
 16. Oh! Great! Thank you very much Ashwin ji! For your visit to our blog and for your comment! May be the reason told by them is right! Noted down your blog title. Thanks a lot!

  பதிலளிநீக்கு
 17. ( த.ம.7) -அருமையான பதிவு. வாசிம் மாதிரி க்ஷேத்திர பாலகர்கள் இந்தியாவில் இருப்பது மகிழ்ச்சி தருகிறது. இந்தச் செய்தியை எங்களுக்குத் தெரிவித்த உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 18. இதைப் படித்த போது எனக்கு நாதஸ்வர வித்துவான் சேக் சின்ன மௌலானா, செனாய் வித்துவான் உஸ்ரத் பிஸ்மிலா கான் நினைப்பு வந்தது.
  சேக் சின்ன மௌலானா திருப்புகழ் வாசித்தால், தனித்துவமான தெய்வீக ஒலி அது.
  பிஸ்மிலா கானை காசியில் அவர் இருக்கும் வீடு வசதிக்குறைவாக இருப்பதால், வயது போனதாலும் அவர்
  வெளிநாட்டு ரசிகர்கள், தங்களுடன் வந்து கடைசிக் காலத்தைக் குடும்பத்துடன் கழிக்கும் படி கேட்ட போது; பிஸ்மிலா கான் கேட்டாராம், "எல்லாவற்ரையும் தருவதுடன், எனக்கு தினமும் தரிசனம் செய்ய காசி விசுவநாதர் ஆலயத்தயும் கொண்டுவந்து தரமுடியுமா? என்ன? பற்றுதல்.
  400 வருட உறவு, அவர் 8 தலைமுறை இக்கோவிலில் சேவகம் செய்துள்ளது.
  தெளிந்த பற்று எதிலும் பிரிவைத் தேடாது

  பதிலளிநீக்கு
 19. இப்படிப்பட்ட வாசிம் களை நாம் அறிவதே இல்லை
  முஸ்லிம்கள் என்றால் தீவிரவாதிகள் என்ற கருத்து மாறவேண்டும் சகோ!!
  மிக நல்ல பதிவு சகோ!!

  பதிலளிநீக்கு
 20. தங்களுக்குத்தான் நன்றி கூற வேண்டும்!

  மிக்க நன்றி! 7 வது போட்டு தமிழ் மகுடம் போனதற்கு!

  பதிலளிநீக்கு
 21. மிக்க நன்றி சகோதரி! சரிதான்...//முஸ்லிம்கள் என்றால் தீவிரவாதிகள் என்ற கருத்து மாறவேண்டும்// 100%
  நன்றி!

  பதிலளிநீக்கு
 22. மிக நல்லதொரு பின்னூட்டம் யோகன்! மிக அருமையான, பலரும் அறிந்திராத புதிய தகவல்களைத் தந்தமைக்கு மிக்க நன்றி! அதுவும் லெஜண்ட்களாகிய ஷேக் சின்ன மௌலானா, பிஸ்மில்லா கான் பற்றிய தகவல் புல்லரிக்க வைக்கின்றது!

  மிக்க நன்றி யோகன் தங்கள் இந்த அழகிய பின்னூட்டத்திற்கு! வரவேற்கின்றோம்!

  பதிலளிநீக்கு
 23. மிகச் சிறப்பான பகிர்வு.....

  நல்ல மனம் கொண்ட மக்களாய் இருப்போம்....

  பதிலளிநீக்கு
 24. மிக்க நன்றி வெங்கட் நாகராஜ்! நண்பரே!

  பதிலளிநீக்கு