ஞாயிறு, 12 ஜனவரி, 2014

ஜில்லா - ஜஸ்ட் ஒரு பார்வை


ரௌடி அப்பாவுக்கு சக்தியாய் உடனிருந்து, ரௌடித்தனம் செய்யும் மகன் (வளர்ப்பு மகன்), அப்பாவின் விருப்பத்திற்காக போலீஸில் சேர்ந்து (அஸிஸ்டென்ட் கமிஷனராக!) உண்மையாக போலீஸாய் மாறி அப்பாவை வில்லனிடமிருந்துக் காப்பாற்றி, நல்லவராக்கி, அவரது விருப்பப்படி ஜெயிலுக்கும் அனுப்புவதுதான், டைரக்டர் நேசனின் இந்த “ஜில்லா”. 


அப்பாவும் பிள்ளையுமாக, மோஹன்லாலும், விஜய்யும் மிக அருமையாகத் தங்களுடைய கதாபாத்திரங்களைக் கையாண்டிருப்பது படத்திற்கு மெருகேற்றுகிறது.


இண்டெர்வலுக்கு முன்பு வரை படத்தை இழுத்தாலும், இண்டெர்வலுக்கு ஜஸ்ட் முன் அப்பாவும், மகனும் மோதிக் கொள்ளும் (வார்த்தைகளை வீசி) காட்சியில், விஜய்யும், மோஹன்லாலும் அவரவர்களுக்கே உரித்தான ஸ்டைலில் அசத்துகிறார்கள். இரண்டாம் பகுதி இறுதி வரை, விறு விறுப்பாகப் போனாலும், படம் பார்ப்பவர்கள் எளிதாக அடுத்தடுத்தக் காட்சிகளை ஊகிக்க முடிவது, இதே கதையை நாம் பல படங்களில் சிறிய மாற்றங்களுடன் கண்ட ஒன்றானதால்தான். 


புதுமை என்பது விஜய், லாலேட்டன் காம்பினேஷன்தான். அதுதான் “ஜில்லா. அதுவின்றி வேறொன்றும் “இல்லா” .  பாடல்கள் எல்லாம் கேட்கும்படியாக இருக்கின்றன. (வரிகள் தெளிவாகக் காதில் விழுகின்றது). 


கண்டாங்கி  கண்டாங்கி
விஜய் பாடிய பாடல் நல்லாருக்கு

‘வெரசா போகையிலே, புதுசா போறவளேயும், ‘கண்டாங்கிக் கட்டி வந்த பொண்ணும் மனதில் நிற்கின்றது. விஜய்யின் நண்பனாக வரும் “சூரி யின் நகைச் சுவை பரவாயில்லை. நாயகி காஜல் அகர்வால் காதலியாகவும், காவல் அதிகாரியாகவும் தன் கதாபாத்திரத்தை நன்றாகவேச் செய்திருக்கின்றார்.

காக்கிச் சட்டையை வெறுக்கும் விஜய் லஞ்சம் வாங்கும் பெண் போலீசாரைக் கை நீட்டி அடித்தப் பெண்ணைக் கண்டதும் காதல் கொண்டு பெண் பார்க்கத் தம்பி, தங்கை மற்றும், ரௌடித் தோழர்களுடன் காஜல் அகர்வால் வீடு சென்று காத்திருக்கும் போது, காக்கி யூனிஃபார்மில் வரும் காஜலைக் கண்டு மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தடுமாறும் இடம் அருமை. அதே போல் உண்மையானப் போலீசாக (மனு நீதிச் சோழனாக) மாறி, தன்னிடம் நீதி கேட்க வந்தப் பெண்ணுக்காகக் காக்கி அணிந்து, தன் அப்பாவின் ரௌடிகளையேத் தாக்கும் இடம் அருமை.

வில்லன் சம்பத்ராஜ், வில்லனாவதற்கு முன்பும், வில்லனான பின்பும் தன் கதா பாத்திரத்தை பாராட்டும் படியாகச் செய்து, படத்தில் வில்லன் இல்லாத குறையைத் தீர்க்கிறார். 


பூர்ணிமா ஜெயராம் அம்மாவின் கதாபாத்திரத்தை அழகாகாகச் செய்து போகிறார்.  விஜய், தங்கையின் கல்யாணப் பந்தியில் அழையா விருந்தாளியாய் வருமிடத்திலும், தம்பியை வில்லனிடமிருந்துக் காப்பாற்ற முயலும் இடத்திலும், நல்ல ஒரு அண்ணனையும் உருக்கமாகக் காண்பித்து நெஞ்சை நெகிழச் செய்கிறார். ஜில்லா எதிர்பார்த்த மாதிரி (உங்களை யாரு ரொம்பவெல்லாம் அவசியமில்லாம எதிர்பார்க்கச் சொன்னது?) ரொம்ப ரொம்ப நல்லா இல்லனாலும், பார்க்கிற மாதிரி பரவா ‘இல்லதான். 

பரவா'இல்ல'தான்

18 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. நன்றி நண்பரே!! பொங்கல் வாழ்த்டுக்களுக்கு!!

      துளசிதரன், கீதா

      நீக்கு
  2. படங்களுடன் தெளிவான சுருக்கமான
    விமர்சனம் அருமை
    குறிப்பாக முடிவாகச் சொல்லிப்போனது...

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. த்ங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!! பொங்கல் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி!

      துளசிதரன், கீதா

      நீக்கு
  3. 'ஜில்லா' -- ஜில் ஆ இல்ல என்பது உண்மைதான்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹலோ கோவை ஆவி! வாங்க வாங்க! ரொம்ப சந்தோஷமாக இருக்குது! என் தோழி உங்களைச் சந்தித்ததைப் பற்றிச் சொன்னார்! தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி!!

      நீக்கு
  4. //புதுமை என்பது விஜய், லாலேட்டன் காம்பினேஷன்தான். அதுதான் “ஜில்லா”. அதுவின்றி வேறொன்றும் “இல்லா”//

    பாயிண்ட புட்ச்சிகின வாத்யாரே...!

    அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...

    பதிலளிநீக்கு
  5. நன்றி! நைனா! இப்பால வ்ந்து கர்த்து சொல்லிகின பாரு அத்குதான்!!!
    நன்றி!!1

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் சகோதரர் (ஐயா)
    ஜில்லா படத்தினைப் பற்றி அனைவருக்கும் புரியும்படி எளிய நடையில் சுருக்கமாக நறுக்கென்று ஒரு விமர்சனம் அருமை. தங்கள் தளத்திற்கு எனது முதல் வருகை இனி தொடர்வேன். நன்றி.
    --------
    தங்களுக்கும், கீதா சகோதரி அவர்களுக்கும், இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  7. தங்கள் முதல் வருகைக்கும், கருத்திற்கும், தொடர்வதற்கும் மிக்க நன்றி!! மகிழ்சி! நாங்கள் இருவரும் சேர்ந்துதான் எழுதுகின்றோம்!!

    தங்கள் பொங்கல் வாழ்த்திற்கும் மிக்க நன்றி! ஆசிரியரே!!

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு
  8. சிறப்பான திரைப்பட விமர்சனத்திற்கு பாராட்டுக்களும்
    இனிய தைப் பொங்கல் திரு நாள் வாழ்த்துக்களும் சகோதரா .
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இவ்வாண்டு ¨
    மகிழ்ச்சி பொங்கும் ஆண்டாக மலரட்டும் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி! தங்கள் வருகைக்கும், பாராட்டுகளுக்கும், இனிய பொங்கல் வாழ்த்துக்களௌக்கும்!!

      தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்!!

      துளசிதரன், கீதா

      நீக்கு
  9. நன்றி! தங்கள் வருகைக்கும் , கருத்திற்கும்!

    பதிலளிநீக்கு