வெள்ளி, 13 டிசம்பர், 2013

கடவுள் ஏன் கல்லானார்? 2................இந்தக் கல்லில் தங்கள் தலையால் முட்டிக் கஷ்டங்களைத் தீர்த்துவிட நினைப்பவர்களைக் காணாது இருக்கத்தானோ?!


ஏறத்தாழ 35 வருடங்களுக்கு முன், தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே ஓரிடத்தில், நிலத்தை உழுதபோது ஒருகல் தென்பட்டது. அதில் ஏதோ எழுதப்பட்டிருந்தது.  “இந்தக் கல்லில் மூன்று முறை தன் தலையால் முட்டி தன் துயரங்களையும், ஆசைகளையும் சொன்னால், துயரங்கள் மாறும்: ஆசைகள் நிறைவேறும்,”
என்ற வார்த்தைகள் கொத்தப்பட்ட அந்தக் கல் உடனே கடவுளானது.  தேனி, போடி, தேவாரம், கம்பம் அருகே உள்ள சகல பட்டித்தொட்டிகளில் இருந்தும், இந்த “முட்டுக் கோவிலுக்கு பக்த கோடிகள் நடந்தும், மாட்டுவண்டிகளிலும், சைக்கிள்களிலும், வந்து முட்ட ஆரம்பித்து விட்டார்கள்! பிரத்யேகமான, PRC (பாண்டியன் ரோடு ட்ரான்ஸ்போர்ட் கார்பொரேஷன்) கோயில் ஸ்பெஷலாக ஓடின. 
நீண்டக் கயூ.  ஆங்காங்கே “காணிக்கை அண்டாக்கள். சுற்றிலும் ஓலை கட்டி மறைத்த டீக்கடைகள் வளையல் கடைகள் முளைத்தன.  விவசாயத்திற்குக் கூட உபயோகப்படாத தரிசு பூமி இப்படி பலருக்கும்,
திடீரென வருமானம் தேடித்தந்தது. உண்மையான இறையுணர்வு உள்ளவர்களும், பகுத்தறிவு வாதிகளும் முட்டப் போகாமல் இருந்ததோடு மட்டுமல்ல, நூற்றாண்டுகளுக்கு முன்பே மனிதர்களின் மூடநம்பிக்கையை கேலி செய்யும் வகையிலும், இது போல் கல்லில் கொத்தி வைக்கப்பட்டப் பலதிலும் அன்றைய மனிதர்களின் விருப்பு வெறுப்புகள் ஒளிந்திருக்கும் என்று மறை முகமாக மக்களுக்கு வெளிப்படுத்த நினைத்த ஏதோ ஒரு உண்மையான பக்தன், அல்லது சீர்திருத்த வாதியின் செயல்தான் இந்த முட்டுக் கல் என்று உரக்கச் சொல்லவும் எழுதவும் செய்தார்கள்.  அதற்கெல்லாம் செவி சாய்க்காது இருந்த பாமர மக்கள் பலமுறை முட்டியும் பலனில்லாமல் போகவே, தனியே தங்கள் முட்டல்களை ஒரு சில மாதங்களுக்குள் நிறுத்தி விட்டார்கள்.  தாமதமின்றி அங்கிருந்த காணிக்கை அண்டாக்களும் கடைகளும் மறைந்து, அது மீண்டும் கல்லும் முள்ளும் நிறைந்த காட்டுப் பிரதேசமானது.

மூட நம்பிக்கைகளை எதிர்த்துப் போராடுபவர்கள், நாம் வாழும் இந்தக் கால கட்டத்தில் மட்டுமல்ல, நூற்றாண்டுகளுக்கு முன்பும் இருந்திருக்கிறார்கள் என்பதற்கானத் தெளிவுதான் அந்த ‘முட்டுக்கல் கல்வெட்டு.  அன்றும், இன்றும், மூடநம்பிக்கைகள் எதிர்க்கப்பட்டுக்கொண்டுதான் இருந்தன, இருக்கின்றன.  இதில் மிகவும் வேடிக்கையான சம்பவம் என்னவென்றால், வரும் தலைமுறைக்கு ‘விழிப்புணர்வு உண்டாக்கக் குழித்திடப்பட்ட "முட்டுக்கல்லும்" இறைவன் ஆனதுதான். இப்படித் தங்களுக்கு எதிராகப் பிரயோகிக்கப்படும் எந்த ஒரு ஆயுதத்தையும் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் லாப நோக்கு உள்ளவர்களையும், தாங்கள்தான் இறைவனின் “ப்ரைவட் செக்ரட்டெரிகள் என்று சொல்லித் திரியும் கபட பக்தர்களையும் நாம் தத்துவம் பேசித் திருத்த முடியாது. அவர்களிடம் சிக்கி சீரழியக் கூடாது என்று பொது மக்களை எச்சரிக்கத்தான் முடியும்.  இதிலிருந்து நாம் புரிந்து கொள்ளவேண்டிய மற்றொரு உண்மை என்னவென்றால், கல்வெட்டுக்களிலும், ஓலைகளிலும் எழுதப்பட்ட எல்லாவற்றையும் நாம் கண்ணை மூடிக் கொண்டு நம்பக்கூடாது என்பதும்தான்.  அவற்றில் பலதும், சமூகத்தை எளிதாக ஏமாற்றும் திறனுடைய சிலர், தம் குடும்பத்தாரும், இனத்தாரும் சுகமாய் வாழ அவர்களுக்குச் சாதகமாக அவர்களே எழுதி வைத்த புரணங்களும், உப புராணங்களும், ஸ்ம்ருதிகளும், ஆகமங்களும், வேத வியாக்யானங்களும் தான். இத்தகைய இடைச் செருகள்களில்தான் சாதி விவஸ்தையும், பிராமணர்களுக்கு பசு, பொன், மற்றும் பூமி தானம் செய்தால் விஷ்ணு பகவான் வைகுண்ட பதவி தருவார் போன்றவை எல்லாம் குறிப்பிடப்பட்டிருக்கிறது. எனவே நம் முன்னோர்கள் இப்படி சொன்னதாகச் சொல்லப்படுவதில் எது  பொது நலம் கருதி சொன்னது, எது சுயநலம் கருதி சொன்னது என ஆய்வு செய்து அறிந்து அதில் பொது நலம் கருதி சொன்னதை மட்டும் உட்கொள்ளவேண்டும். இங்கு,

“எப்பொருள் யார்யார்வாய் கேட்பினுன்- அப்பொருள்
மெய்பொருள் காண்பது அறிவு


என்ற வள்ளுவன் வாக்குத்தான் நமக்கு வேதவாக்காக இருக்க வேண்டுமே ஒழிய, "இது உண்மையிலேயே வேதவாக்குகள்தான்என்று சொல்லப்படுபவையை  அல்ல.

14 கருத்துகள்:

  1. வரும் தலைமுறைக்கு ‘விழிப்புணர்வு’ உண்டாக்கக் குழித்திடப்பட்ட "முட்டுக்கல்லும்" இறைவன் ஆனதுதான். //வேடிக்கை மனிதர்கள் வியாபார தந்திரங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "வேடிக்கை மனிதர்கள் வியாபார தந்திரங்கள்" சரியாகச் சொன்னீர்கள் கவியாழி! மிக்க நன்றி உங்கள் வருகைக்கும், கருத்திற்கும்!!

      நீக்கு
  2. அருமையாகச் சொன்னீர்கள்
    உருவ வழிபாடு கூடாது என்ற
    புத்தனையே உருவப்படுத்தி
    கோவிலாக்கிக் கொண்டாடும் சமூகத்தில்
    கற்கள் எல்லாம் சாமியாவது இயல்புதானே
    அருமையான தெளிவூட்டும் பகிர்வுக்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல செறிவுள்ளக் கருத்து!! உங்கள் வருகைக்கும், நல்ல கருத்திற்கும், வாழ்த்திற்கும், மிக்க நன்றி! த.ம. இட்டு ஊக்கத்திற்கும் தான்!!

      நீக்கு
  3. வணக்கம்
    பல ஆதரங்களுடன் பதிவை எழுதியுள்ளீர்கள் பதிவு அருமை வாழ்த்துக்கள்...த.ம .வாக்கு3

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே! நீங்கள் எங்களைத் தொடர்ந்து வாசித்து, த.ம. இட்டு ஊக்கப்படுத்துவதறகு மிக மிக நன்றி!!!

      நீக்கு
  4. //இறைவனின் “ப்ரைவட் செக்ரட்டெரிகள்’ என்று சொல்லித் திரியும் கபட பக்தர்களையும் நாம் தத்துவம் பேசித் திருத்த முடியாது. அவர்களிடம் சிக்கி சீரழியக் கூடாது என்று பொது மக்களை எச்சரிக்கத்தான் முடியும்//

    உண்மை...உண்மை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் காமக்கிழத்தன் அவர்களே! இந்த உண்மைகள் தான் நம் நாடு இன்னும் அறிவியல் தளத்தில் சென்று சர்வதேச அளவில் முன்னிறுத்த முடியாமல் போக இருக்கும் தடைகள்! என்ன செய்ய? அரியணைக்குப் போட்டி போடுபவர்கள் இதைப் பற்றிச் சிந்தித்தால் நல்லது!! மிக்க நன்றி உங்கள் கருத்திற்கு!!!

      நீக்கு
  5. குறளோடு சரியாகச் சொன்னீர்கள்...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி உங்கள் வருகைக்கும்! கருத்திற்கும்! DD அவர்களே!!!

      நீக்கு
  6. அன்புடையீர்! வணக்கம்!
    இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (05/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.

    வலைச்சர இணைப்பு: http://blogintamil.blogspot.fr/2015/06/5.html#comment-form

    திரு. துளஸிதரன் V. தில்லையக்காது அவர்கள்
    வலைத்தளம்: Thillaiakathu Chronicles

    http://thillaiakathuchronicles.blogspot.com/2015/04/Teakwood-Museum-Nilambur-Kerala.html

    தேக்குமர அருங்காட்சியகம் – நிலம்பூர் – கேரளா

    http://thillaiakathuchronicles.blogspot.com/2013/12/superstitions.html

    கடவுள் ஏன் கல்லானார்?


    http://thillaiakathuchronicles.blogspot.com/2014/12/What-Is-Education-Learning.html

    கற்க கசடற .... கற்பிக்கவும் கசடற

    பதிலளிநீக்கு
  7. வலைச்சர அறிமுகம் பார்த்து உங்க பக்கம் வந்து படித்து ரசித்து பின்னூட்டம் போடுறேன் ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க "எப்பொருள் யார் யார் வாய் கேடபினும். "

    பதிலளிநீக்கு
  8. கல்வெட்டுக்களிலும், ஓலைகளிலும் எழுதப்பட்ட எல்லாவற்றையும் நாம் கண்ணை மூடிக் கொண்டு நம்பக்கூடாது என்பதும்தான்.  அவற்றில் பலதும்,
    சமூகத்தை எளிதாக ஏமாற்றும் திறனுடைய சிலர், தம் குடும்பத்தாரும், இனத்தாரும் சுகமாய் வாழ அவர்களுக்குச் சாதகமாக அவர்களே எழுதி வைத்த புரணங்களும், உப புராணங்களும்,
    ஸ்ம்ருதிகளும், ஆகமங்களும், வேத வியாக்யானங்களும் தான். இத்தகைய இடைச் செருகள்களில்தான் சாதி விவஸ்தையும், பிராமணர்களுக்கு பசு, பொன், மற்றும் பூமி தானம் செய்தால்
    விஷ்ணு பகவான் வைகுண்ட பதவி தருவார் போன்றவை எல்லாம் குறிப்பிடப்பட்டிருக்கிறது. எனவே நம் முன்னோர்கள் இப்படி சொன்னதாகச் சொல்லப்படுவதில் எது  பொது நலம் கருதி
    சொன்னது, எது சுயநலம் கருதி சொன்னது என ஆய்வு செய்து அறிந்து அதில் பொது நலம் கருதி சொன்னதை மட்டும் உட்கொள்ளவேண்டும்.////

    நீங்கள் சொன்னது 100% உண்மை!
    இது போன்றதொரு விழிப்புணர்வு ஏர்படுத்தும் கருத்துக்கள்
    என்னை சமயம் கிடைக்கும்போது தங்களின் பழைய பதிவுகளை வாசிக்க தூண்டுகிறது.
    அந்த வரிசையில் பல கட்டூரைகள் உங்கலோடது எனக்கு பிடிச்சிருக்கு.
    துலசி சார் மற்றும் கீதா மேடம்!
    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு