திங்கள், 23 டிசம்பர், 2013

ஐயப்ப பக்தர்கள் பம்பை நதியில் ஒழுக்கி விடும் துணிகள் தருவதோ 36 லட்சம்......


எப்படி இருந்த நான் கீழே பாருங்கள் இப்படி  ஆயிட்டேன்!!!!

15 வருடங்களுக்கு முன்பு வரை பம்பை நதியில் குளித்துத் தங்கள் பாவங்களை கழுவும் பக்தர்கள்தான் இருந்தார்கள். தாங்கள் உடுத்தியிருக்கும் துணிகளில் அந்த பாபங்கள் ஒட்டிக் கொண்டு தங்களைத் தொடரும் என்ற எண்ணம் உண்டாதாலோ என்னவோ,
1990 க்குப் பிறகு தாங்கள் உடுத்தி இருக்கும் துணிகளை ஒழித்து விடும் வழக்கம் ஐயப்ப பக்தர்களிடையே அதிகமாகி விட்டது. இது பம்பா நதி நீரை மாசு படுத்தி, குளிக்கும் ஐயப்ப பக்தர்களுக்கு அரிப்பும், அதனால் உண்டாகும் தடிப்பும் ஏற்படத் தொடங்கியது.  எனவே தேவசம் போர்ட் துணிகளை நீக்க முடிவெடுத்து நீக்கி பம்பா நதியைச் சுத்தப்படுத்தியது.
நீக்கப்பட்ட்த் துணிகளில், நல்லவைகளை விற்ற, தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு நல்ல ஒரு தொகை கிடைக்க, அடுத்த வருடமே அவர் ரூ. 11,000 க்கு, துணிகளை பம்பா நதியில் இருந்து எடுக்க டெண்டர் எடுத்து விட்டார்.

என்னை வைத்தும் வியாபாரம் நடக்கிறது!! கேடுகெட்ட விந்தையான உலகம்!!


      ஒவ்வொரு வருடமும் ஏலத் தொகை கூடிக் கூடி வந்தது. போன வருடம் அது 30 லட்சம் ரூபாயானது.  இவ்வருடமோ அது 36 லட்சமாகி இருக்கிறது. இப்படி செய்பவர்களில் முதலிடம் வகிப்பவர்கள் ஆந்திர மாநிலத்தையும், இரண்டாம் இடம் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்களுக்காம். போகிறப் போக்கைப் பார்த்தால் பாபம் செய்தவர்களின் துணிகளை மூட்டைக் கட்டிக் கொண்டு வந்து, பம்பா நதியில் போடவும் வாய்ப்புண்டு.  தேவசம் வருமானம் கூட்ட இப்படி விடப்படும் துணிகளுக்கு டிக்கெட் வைக்கலாம். நல்ல நேரங்களில் நதியில் விட்டால் நல்ல பலன் உறுதி என்று யாரேனும் சொல்லக் கேட்டால், பின் பம்பா நதியில் நல்ல நேரத்தில் ஒழிக்கி விட நீண்ட க்யூ.  இப்படி அந்தத் துணிக் கதை, ஒழிகிக் கொண்டே இருக்கத்தான் செய்யும்.  நம் நாட்டில் இப்படித்தான் எப்போதும் இறை உணர்வும் மூட நம்பிக்கைகளும் முழங்காலுக்கும் மொட்டைத் தலைக்கும் முடிச்சு இடுவது போல் சம்பந்தப் படுத்தப்படும்.  படித்தவர்களும் பாமரர்களும் கண்முடித்தனமாக இதைப் பின்பற்றத்தான் செய்வார்கள்.  இதை விட, சபரி மலைக்கு வரும் முன், இப்படிச் செய்பவர்கள், ஒரு ஜோடி ஆடைகளை ஏழைகளுக்குக் கொடுத்து, பின்னர் ஐயப்பனை தரிசிப்பது இதை விடச் சிறந்தது.  அன்ன தானம் ஐயப்ப பக்தர்களால் மிகச் சிறப்பாகச் செய்யப்படுவது போல் ஆடை தானம் செய்யப்பட்டால், கலியுக வரதனின் அருள் நிச்சயம்!! 

29 கருத்துகள்:

 1. வணக்கம்

  மிகஅருமையான தகவல் வாழ்த்துக்கள் நண்பரே...
  த.ம 1வது வாக்கு
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி நண்பரே தங்கள் வருகைக்கும், கருத்திற்கும்!! முதல் வாக்கிற்கும்!!!!

   நீக்கு
 2. மூடநம்பிக்கை என்னும் பிடியில் அகப்பட்டு,
  நம்பிக்கை என்னும் பேராயுதத்தை மனதில் ஏந்தாதவர்கள் செய்யும் செயல் இது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிகச் சரியாகச் சொன்னீர்கள்! நண்பரே!! மிக்க நன்றி தங்கள் வருகைக்கும் கருத்திற்கும்!!

   நீக்கு
 3. இது போல் மூட நம்பிக்கை இருக்கும் வரை ஒன்றும் செய்ய முடியாதென்பதும் உண்மை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சரியாகச் சொன்னீர்கள்! இது போன்று ஆறுகளிலும், அருவிகளிலும் குளிப்பவர்கள், சோப்பு, ஷாம்பூ போட்டுக் குளிப்பதும், துணிகள் துவைப்பதும், இப்படி நிறைய அடுக்கிக் கொண்டே பொகலாம்....இடுகை ஆகி விடும்.

   நன்றி நண்பரே!! தங்கள் வருகைக்கும், கருத்திற்கும்!!

   நீக்கு
 4. நல்ல யோசனை
  யாராவது ஒரு பிரபல குருசாமி
  செய்யத் துவங்கினால் காலப்போக்கில்
  மெல்ல மெல்ல பழக்கமாகி விடும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சரிதான்! காலம்தான் பதில் சொல்லும்!! என்ன செய்ய? நம் நாடு மூடநம்பிக்கைகளில் வேறூன்றிக் கிடக்கின்றதே!! நன்றி தங்கள் கருத்திற்கு!!

   நீக்கு
  2. தங்கள் கருத்து மிகச் சரியே! குருசாமிகள் ஐயப்பன் சீசனில் மட்டும்தானே தோன்றுகிறார்கள்! அவர்களும் எல்லோரையும் போல ஐயப்ப பக்தர்கள் தானே! தாங்கள் சொல்லுவது போல் அவர்கள் மனதிலும் சமூகச் சீர்திருத்த எண்ணங்கள் தோன்ற வேண்டும்! அப்போதுதான் இது போல எல்லாம் நடக்காது! அதற்கும் அந்த ஐயப்பன் தான் அவர்கள் மனதில் அந்த எண்ணங்கள் தோன்ற அருள் செய்ய வேண்டும்!!!

   நீக்கு
 5. மூடநம்பிக்கைகளின் விளைவு. கடைசியில் சொன்ன உங்கள் யோசனையை அய்யப்ப பக்தர்கள் செய்தால் புண்ணியம் உண்டாகும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் முதல் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி!! அந்த பக்தர்கள் செய்வார்களா? செய்தால் மிக உத்தமம். நம்மால் முடிந்த அளவு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்!!

   தங்கள் இடுகைகள் தமிழ்மண மகுடம் வருவதைக் கண்டிருக்கிறேன். தங்களை மதுரைத் தமிழன் கலாய்த்ததையும் வாசித்து ரசித்தேன்!! தங்கள் வலைப்பூ எங்கள் வலைப்பூவில்!

   மிக்க நன்றி!

   நீக்கு
 6. இதே கூத்து திருநள்ளீச்வரர் (சனி பகவான்) கோவிலிலும் உண்டாமென அறிந்தேன். அவர்களும் இவாடைகளை எடுத்து ஏலம் விடலாம்.
  நீங்கள் கூறிய ஏழைகளுக்கு உடைத் தானம் மிகச் சிறந்தது. அது பம்பையும், ஏழையும் தூய்மையுடன் வாழ வழி சமைக்கும். செய்வார்களா?
  கங்கையை ஒரு வழி பண்ணிவிட்டார்கள்; இப்போ ஏனைய நதிகளுமா?
  மூடத்தனத்துக்கு முடிவே இல்லை.
  திருப்பதி வெங்கடாசலபதிக்கு கொடுக்கும் முடியால்; இத்தாலியில் ஒரு குடும்பம் 5 சொந்த விமானம் வைத்து வியாபாரம் செய்கிறது; உலகிலே இன்னும் முடியை நீளமாக வளர்க்கும் பெண்கள் இந்தியாவில் தான் மிகுதியாக உள்ளதாகவும், அவர்களில் கணிசமானவர்கள் வாழ்நாளில் ஒரு தடவையாவது தங்கள் நீளமான
  முடியைக் காணிக்கை கொடுப்பதால், இன்னும் இந்திய முடி, உலகப் பெண்களின் முடியலங்காரத்தில்
  மிகப் பெரிய வர்த்தக வலுவைச் சேர்த்திருப்பதாக ,அந்த விபரணம் விளக்கிச் சென்றது.
  அம் முடியைச் சீர்படுத்தும் பணியில் ஆந்திராவில் நிறையப் பெண்கள் பணி புரிவதாகவும் காட்டினார்கள்.
  அத்துடன் திருப்பதியில் நடக்கும் அன்னதானம் அந்த முடி வியாபாரத்திலிருந்து வரும் ஒரு பகுதியே எனக் காட்டினார்கள்.திருப்பதியான் ,முடி கொடுத்தோரை விட இந்த முடியைப் பிடித்துக் கொண்டு இடையில் நின்றோர் இந்தியா தொடங்கி இத்தாலி வரை செழிப்புடனே உள்ளார்கள்.
  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதலில் உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி! அன்பரே! தாங்கள் சொல்லியிருப்பது அனைத்தும் சரிதான்! திருப்பதியில் நடப்பதும் அறிந்ததுதான்! தங்கள் கருத்து மிக அழகாக, தெளிவாக ஒரு இடுகைக்குச் சமமாக இருக்கிறது!! தாங்கள் கூட இதைப் பற்றி விளக்காமாக, ஆதாரங்களுடன் ஒரு இடுகை தங்கள் வலைப்பூவில் எழுதலாமே! திருப்பதி அன்பர்களும் அறியட்டுமே! அதே போல் சனி பகவான் அன்பர்களும்! இந்த முடியின் ப்ரோட்டின் அங்கு தயாரிக்கப்படும் சாக்கேலேட்டுகளில் கலப்பதாகவும் வாசித்திருக்கிறேன்!!!

   தங்கள் கருத்திற்கும் வருகைக்கும் மிக்க நன்றி, தங்களை நாங்கள் தொடர்கிறோம். தங்கள் வலைப்பூ எங்கள் வலைப்பூவில் சேர்ந்து விட்டது! நன்றி!

   நீக்கு
 7. //இப்படிச் செய்பவர்கள், ஒரு ஜோடி ஆடைகளை ஏழைகளுக்குக் கொடுத்து, பின்னர் ஐயப்பனை தரிசிப்பது இதை விடச் சிறந்தது.//

  நன்றாக கூறியுள்ளீர்கள்..

  தமிழ்மணம் 5

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி! கிருஷ்ணா!! உங்கள் முதல் வருகைக்கும், கருத்திற்கும்!

   நீக்கு
 8. கந்தை ஆனாலும் கசக்கிகட்டு என்பார்கள் இவர்கள் சுத்தமான ஆற்றையே கந்தல் ஆக்குவது ,பிறகு அந்த நீரையே புனித நீர் என்று அருந்துவதையும் பார்த்தால் ஆறறிவு உள்ளவர்கள் தானா என்று சந்தேகம் வருகிறது !
  +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பகவான் ஜி! //கந்தை ஆனாலும் கசக்கிகட்டு என்பார்கள் இவர்கள் சுத்தமான ஆற்றையே கந்தல் ஆக்குவது// உங்கள் நடையில் கருத்துள்ள பின்னூட்டம்!! தாங்கள் சொல்வது போல் புனித நீர் என்று அருந்தித்தான் பல வியாதிகள் நம்மூரில் கொட்டிக் கிடக்கின்றது. என்ன செய்ய? எப்போது இதெற்கெல்லம் விடிவு வருமோ?!! நன்றி ஜி!!

   நீக்கு
 9. //இதை விட, சபரி மலைக்கு வரும் முன், இப்படிச் செய்பவர்கள், ஒரு ஜோடி ஆடைகளை ஏழைகளுக்குக் கொடுத்து, பின்னர் ஐயப்பனை தரிசிப்பது இதை விடச் சிறந்தது.//

  சேம் பீலிங்...

  அல்லாம்... போட்டாச்சு... போட்டாச்சு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி நைனா!! சேம் பீலிங் குக்காக.....போட்டாச்சுக்கும் நன்றி

   நீக்கு
 10. எவனோ ஒருத்தன் குளிக்கும் போது தன்னே வேட்டி அவிழ்ந்து தண்ணீர்ல் போயிருக்கும்; சமாளிக்க வேட்டியை ஆத்துல விட்டால் போற வழிக்கு புண்ணியம் என்று ரீல் விட்டு இருப்பான்! செம்மறி ஆட்டுக் கூட்டம்---அவ்வளவு தான்---நம் மக்கள் எல்லோரும் வேட்டியை ஆத்துல உடுவானுங்க!
  தமிழமணம் +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி! நன்றி! வழக்கமான நம்பள்கி Style பதில் பின்னூட்டம்! ரசித்தோம்!

   நீக்கு
  2. நம்பள்கி! என் தோழியும் நானும் உங்கள் பின்னூட்டத்தை வாசித்து, ரசித்து, சிரித்து மாளவில்லை! ரொம்பவே ! எப்படி இப்படி உங்களால் எழுத முடிகிறது நம்பள்கி!! செம flow like a river !!!

   நீக்கு
 11. மூட நம்பிக்கைகளின் ஊடாக எழைகளின் அபிலாசைகளும் நிறைவேற்றப்
  படுமானால் அந்த நம்பிக்கைகளை நாமும் வரவேற்கலாம் என்பதை
  நானும் ஏற்றுக் கொள்கின்றேன் சகோதரா .சிவன் சொல்லவில்லை பசியாலும்
  பட்டினியாலும் அங்கு பல உயிகள் மாளும் போது தனக்குப் பால் வார்க்கும்படி .
  சிறப்பான ஆகதிற்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சகோதரா .

  பதிலளிநீக்கு
 12. எத்தனை பெரியார் வந்தாலும் இவர்களை எல்லாம்திருத்த முடியாதுங்க சகோ. தாங்கள் சொல்வது போல படித்தவர்களும் இது போன்ற விஷயங்களில் ஈடுபடுவது வேதனையான செய்தி. இப்படி கண்மூடித்தனமாக வேண்டாதவைகளை செய்வதை விட வயதானவர்களுக்கும் ஊனமடைந்தவர்களுக்கும் உதவுவது போன்ற செயல்களை செய்யலாம். அதுவும் புண்ணியம் என்று தானே எல்லா மதமும் சொல்கிறது அதை ஏன் செய்வதில்லை இவர்கள்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம்! ஆனால் புண்ணியம் என்பதே சரியாகப் புரிந்துகொள்ளப்படவில்லையே சகோதரி! புரிந்து கொண்டால்தானே உதவுவது போன்ற செயல்களைச் செய்வார்கள்...எங்களுக்கு இந்தப் புண்ணியம் என்பதிலேயே கருத்து வேறுபாடு உண்டு சகோதரி...

   மிக்க நன்றி சகோதரி!

   நீக்கு