புதன், 4 டிசம்பர், 2013

சட்டம் ஆண்களுக்கு ஒரு இருட்டறையா?



செய்தித் தாளில், “பணியிடங்களில் பாலியல் வன்முறை-நெருங்கி வரும் ஆபத்து என்ற ஒரு நல்ல அருமையான செய்திப் பதிவு. இதைப் பற்றிய விவகாரத்திற்கு பின்னர் வருகிறேன். அதற்கு முன், அதைப் படித்த போது எனக்குத் தோன்றியது இதுதான். சட்டத்தின் முன் நம் சமுதாயம் பெண்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் ஆண்களுக்கு இல்லையோ?  என்று தோன்றியது.  பெண்களுக்கு எதிரானதாக இதைச் சொல்லுவதோ எழுதுவதோ என் நோக்கம் அல்ல. ஆண்களின் மனதையும் கொஞ்சம் கருத்தில் கொள்ளுங்கள் என்று இந்த சமுதாயத்திடம் ஒரு வேண்டுகோள்.  அவ்வளவே! ஏன், எப்போதுமே ஆண்கள் தவறானக் கண்ணோட்டத்தில் பார்க்கப் படுகிறார்கள்?  ஏதோ, ஒரு சில இடங்களில் நடக்கும் ஒரு சில சம்பவங்களை வைத்து, “எல்லா ஆண்களுமே மோசமானவர்கள்,  ஆண்களே இப்படித்தான் போன்ற நோக்கு சமுதாயத்தில், ஏன் பெண்களிடையே ஏற்பட்டுள்ளது?  இதற்குக் காரணம் என்ன? பொதுவாக பெண்களுக்குக் கொடுக்கப்படும் அதீதமான முக்கியத்துவம்?  ஊடகங்களும் அதைத்தானே செய்கின்றன? பெண்களைப் பற்றிய செய்திகள் பரபரப்பாகப் பேசப்படும் அளவு, வாசிக்கபடும் அளவு, ஆண்களைப் பற்றிய நல்ல செய்திகள் பேசப்படுவதில்லை. அதே சமயம் ஆண்களைப் பற்றிய அவதூறு வெகு எளிதில் காட்டுத்தீ போல பரவுகிறதே?  பெண்களுக்காக வக்காலத்து வாங்க ஆண்கள் இருக்கிறார்கள். ஆனால், ஆண்களுக்காக வக்காலத்து வாங்க பெண்கள் இருக்கிறார்களா? யோசியுங்கள்.சட்டம் கூட பெண்களுக்கு ஆதரவாகத்தான் இருக்கிறது. எதனால்? பெண்கள் வலுவற்றவர்கள், நலிந்தவர்கள் என்ற காரணத்தினால்? அப்படியென்றால் அதுவே, பெண்களை வலுவற்றவர்கள் என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது அல்லவா? பெண்கள் உண்மையிலேயே வலுவற்றவர்களா? அவர்கள் சட்டம் என்கின்ற போர்வையில் ஒளிகிறார்களா? இது அவர்களது தன்னம்பிக்கையை உயர்த்துமா? இல்லை தாழ்த்துமா? இதே சட்டம், பெண் என்ற நோக்கில் “மனைவி என்ற உறவுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது.  அதே பெண் தான் கணவனின் அம்மா, சகோதரி.  ஆனால், சட்டம் இந்தப் பெண்களுக்கு எதிராக திரும்ப வாய்ப்புகள் அதிகம்.  மனைவியும் பெண்தான்.  கணவனின் அம்மா, சகோதரிகளும் பெண் தான். அதே மனைவி அவரது வீட்டில் நாத்தனார் என்ற உறவிலும், எதிர்காலத்தில் மாமியார் என்ற உறவுக்கும் உள்ளாவார்.  அப்போது இதே சட்டம் அவர்களுக்கு எதிராக மாறும் வாய்ப்புகள் அதிகம்.  எனவே சட்டம் இங்கு “பெண் என்பதை விட உறவுகளுக்குத்தான் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கிறதோ?! இதிலும் அவதிப்படுவது அதாவது தன் அம்மா, சகோதரிகள் ஒரு பக்கமும், மறு பக்கம் மனைவியுமாக, இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவிக்கும் சூழல் ஒரு ஆணுக்கு.  இரு தரப்பினருக்கும் நடுவில் சமநிலையோடு இருக்கத் தெரிந்த ஆண் பிழைத்தான்.  இல்லை என்றால், மத்தளத்திற்கு இரு பக்கமும் மொத்துதான்.

ஆண்களுக்கும் மனம் உண்டு. அவர்களுக்கும் உணர்வுகள் உண்டு. எல்லா ஆண்களும் மோசமானவர்கள் அல்லர். அவர்களும் பெண்களை மதிப்பவர்கள் தான். அவர்களிலும் நல்லவர்கள் கணிசமான விகிதத்தில் உண்டு என்ற  பார்வை சமுதாயத்திற்கு வரவேண்டும்.  ஆண்களுக்கும், பெண்களுக்கு நிகராக பிரச்சினைகள் உண்டு. அவர்களுக்கும் வலிகள் உண்டு.  சமுதாயத்திலும் சரி, குடும்பத்திலும் சரி.

ஒரு ஆணின் பிரச்சினை பெரும்பான்மையான குடும்பங்களில் சிறு வயது முதலே ஆரம்பமாகிறது.  அதுவும் பெண் குழந்தகளுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கும் குடும்பங்களில் ஆண் குழந்தையின் வலிகள் அதிகமாக இருக்கும்.  “அவ பொம்பளைப் பிள்ளைடா. நீ ஆம்பிளை. அவளுக்கு நீ விட்டுக் கொடுத்துதான் ஆகணும் என்ற ரீதியில் ஆரம்பிக்கும். இது உளவியல் அடிப்படையில் ஒரு ஆணின் சுயமரியாதையைச் சீண்டிப் பார்க்கும் ஒரு செயலாகி விடுகிறது.  அதுவும் பருவ வயதில் இது போன்ற வார்த்தைகள் ஆணை இன்னும் சீண்டிப் பார்க்கிறது.  இவை எல்லாம் தான் ஒரு ஆண் சமூகத்தில் பல குற்றங்கள் செய்ய அடிப்படைக் காரணமாகிவிடுகிறது. பெற்றோர் காரணமா?  சமூகம் காரணமா? சிறு குழந்தையாக இருந்தாலும், குழந்தைக்கு என்ற மரியாதை உண்டு. அந்தக் குழந்தைக்கும் கொடுக்க வேண்டிய மரியாதையைக் கொடுக்கத்தான் வேண்டும்.  அது தவறும் போதுதான் குற்றங்கள் நடக்கும் சூழல் உருவாகிறது.

அடுத்து ஆண் பருவ வயது அடையும் போது இந்த சுயமரியாதை அதிகமாகும் ஒரு பருவம். இந்தப் பருவ வயதில்தான் ஒரு பெண்ணுக்கும், ஆணுக்கும் உடலில் ஏற்படும் வேதியியல் மாற்றங்களினால், வாழ்க்கையை அணுகும் முறையிலும், கருத்துக்களிலும், சிந்தனைகளிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றது. அந்த வயதிலும் அந்த ஆணுக்குக் கிடைக்கும் மரியாதை மிகக் குறைவு. பருவ வயதில் ஒரு பெண்ணுக்குக் கிடைக்கும் பாதுகாப்பும், உடல் ரீதியான படிப்பினையும், அறிவும்  ஒரு ஆணுக்குக் கிடைக்கிறதா என்றால் இல்லை.  இல்லாவிட்டால் குறைவு என்பதுதான். கிடைக்கும் அறிவும் அறைகுறைதான். அதனால் தான் ஆண் அந்த வயதில் பெண்களிடம் ஈர்ப்பு வந்து  பாதை மாறும் சம்பவங்களும், தான் விரும்பும் பெண் தன்னை விரும்ப வில்லையென்றால் ஒன்று தற்கொலை செய்துகொள்ளுதல் இல்லை என்றால், தீய பழக்கங்கள், வக்கிர புத்தி இவை அவர்களை ஆக்கிரமிக்க வாய்ப்புண்டு. பாலியலைப் பற்றிய சரியான அறிவு இல்லாததால் விளைவு பாலியல் குற்றங்கள், நீலப்படங்கள் பார்த்தல் முதலியவை.  அந்த வயதில் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய மரியாதையும், அன்பும், அவர்களைப் புரிந்து கொள்ளுதலும், அவர்களுக்கு ஏற்படும் மாற்றங்களைப் பற்றிய புரிதலும் இருந்தால் சமுதாயத்தில் ஆண்களால் ஏற்படும் குற்றங்கள் கணிசமான அளவில் குறையும்.  பெரும்பாலான குடும்பங்களில் இந்தப் பருவ வயதில் ஆண்கள் கவனிக்கப்படுவதில்லை எனலாம்.  இந்த வயதுதான் ஒரு ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி மிக மிக முக்கியமான பருவம்.  ஒரு ஆண், ஆணாக, தனி மனிதனாக, மரியாதையுடன் இந்தப் பருவ வயதில் கையாளப்பட்டால் ஆண்களைப் பற்றிய சமுதாயப் பார்வையும் மாறும். ஒரு ஆணைப் பற்றிய பெண்ணின் புரிதலும், ஒரு பெண்ணைப் பற்றிய ஆணின் புரிதலும் இந்த வயதில்தான் ஆரம்பிக்கிறது. இந்தப் புரிதல் இரு பாலாருக்கும் சரியான விகிதத்தில், சரியான முறையில், அறிவியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் கற்பிக்கப்படவேண்டும். வாழ்க்கையைப் பற்றிய, சுற்றி நடக்கும் சம்பவங்களைப் பற்றிய ஒரு பெண்ணின் பார்வைக்கும்paarvaikkum, ஒரு ஆணின் பார்வைக்கும் உள்ள வித்தியாசமும் புரியவைக்கப்பட்டால் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையில் ஏற்படும் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும். 
    
     மேலே சொல்லப்பட்ட ஆரம்பம், அந்தப் புரிதலில் ஏற்படும் வேறுபாடு, அடுத்ததாக மணவாழ்க்கையில், கணவன் மனைவி உறவில் ஏற்படத் தொடங்குகிறது. பொதுவாக, பெண் என்பவள் ஒரு பிரச்சினையை எளிதாகப் புரிந்து கொள்ளுபவள் ஆனால் உணர்வு பூர்வமாகப் பிரச்சினையை ஆணுகுபவள்.  ஆனால், பொதுவாக, ஆண் ஒரு பிரச்சினையைப் புரிந்து கொள்ள சிறிது தாமதிப்பவனாக இருக்கலாம் ஆனால் முடிவு உணர்வுபூர்வமாக இல்லாமல், யதார்த்த ரீதியில் இருக்கும். அதனால், பெண் தனது எண்ணங்களையும், வருத்தங்களையும் வெளிப்படுத்துவதை தன் கணவன் செவி மடுத்துக் கேட்க வேண்டும் என நினைப்பவள். ஆனால், அந்த ஆணுக்கு இது ஒரு புலம்பலாகப் படும்.  ஜுஜுபி எனத் தோன்றும்.  ஏனென்றால் பெரும்பான்மையான ஆண்கள் தங்களது மன அழுத்தத்தையோ, மன வலியையோ பெரிதாக எடுத்துக் கொள்வதில்லையாதலால் அதைப் பற்றி வெளியில் பேசுவதோ, மனைவியிடம் பகிர்ந்து கொள்வதோ கிடையாது.  ஆண் எல்லா விஷயங்களையும் வெளிப்படையாகப் பேசி பகிர்ந்து கொள்வது கிடையாது. அதை ஒரு பெண் தான் சொல்வதை அவன் கேட்க வேண்டும், அவனும் தன்னிடம் எல்லாம் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கும் போது பிரச்சினை வெடிக்கிறது. பெண்ணிற்கும் ஆணிடம் பகிர முடியாத ரகசியங்கள் இருக்கலாம்.  அதை அவள் வெளிப்படுத்தாத போது, ஆண் எல்லாம் பகிரவேண்டும் என எதிர்பார்ப்பது நியாயமாகப் படவில்லை. அவனும் சில விஷயங்களை வெளியில் சொல்லாமல் பாதுகாக்க நினைப்பதில் என்ன தவறு? ஆனால், அவனும் வெளியில் ஏதாவது ஒரு வார்த்தையை சொல்லி மாட்டிக் கொள்ளும் சந்தர்ப்பங்களும் உருவாகும்.

     பொதுவாகப் பெண், தனது கணவனின் பண விஷயத்தில் மிகுந்த கவனமுடன் இருப்பவள் (அதாவது தூண்டித் துருவுபவள்) என்றால், ஆணுக்குச் சில பிரச்சினைகள் உருவாக வழி உண்டு. பண விஷயத்தில் ஆணின் செலவுகளை அறிய விரும்பினாலும் பிரச்சினைகள்தான்.  பெண்ணின் சுதந்திரத்தில் ஆண் தலையிட்டால் பெண் வெகுண்டு வெடிக்கும் பிரச்சினை, ஆணுக்கென்று சில சுதந்திரங்கள் இருக்கும், அதில் பெண் தலையிட்டால் அந்த ஆண் அடங்கிவிடுவான் இல்லை என்றால் மறைக்கத் தொடங்குவான்.  இரண்டுமே அவனது சுயமரியாதையை சீண்டும் விஷயம். குழந்தைகள் வளர்ப்பிலும் கூட ஒரு பெண்ணிற்கும், ஆணிற்கும் வித்தியாசம் இருக்கிறது. இங்கு சொல்லப்பட்ட எல்லாவற்றிலும் விதி விலக்குகள் உண்டு.


     விவாகரத்து என்பது வந்து விட்டால் சட்டம் பெண்ணின் பக்கமே.  ஆண் தான் அதுவரை சம்பாதித்ததைக் கூட இழக்க நேரிடலாம்.  சட்டம்  ஒருதலை பட்சமாக, ஆணிற்கு எதிராகவே இருக்கிறது எனலாம். athuvum Section 498a of IPC  ன் படி ஒரு ஆணையும் அவன் குடும்பத்தாரையும் பற்றி ஒரு மனைவி குற்றப்படுத்தினால் அவர்கள் உள்ளேதான்.  அது பொய்யாக இருந்தாலும். 2005 ல் 58,200 கேஸ்கள் ஃபைல் பண்ணப்பட்டதில், 80% பொய்யாக இருந்ததாம். அதாவது இந்த Section 498a of IPC தவறாகப் பயன்படுத்தப்படுகிறதாம். ஏனென்றால், இதில் ஆண்களுக்கு ஜாமீன் எடுக்கமுடியாதபடியும், உடன் நடவடிக்கை எடுக்கம்படியாகவும், சமரசத்திற்கு வாய்ப்பு இல்லாததாகவும் உள்ள குற்றமாகக் கருதப்படுவதால், இதை முன் ஜாமீன் எடுக்கம்படியாகவும் மாற்ற கோரிக்கை வைக்கப்பட்டு, கோர்ட்டில் நீதிபதி, இது தவறாகப் பயன் படுத்தப்பட்டால் அது சட்ட வன்முறையைத் தூண்டுவதாக அமைந்து விடும் என்று எச்சரித்திருக்கிறார்.
    
     ஒரு ஆணின் மீது adultery வழக்கு போடப்பட்டால் அது கோர்ட்டில் செல்லுபடியாகும்.  ஆனால், அதே adultery வழக்கு  ஒரு பெண்ணின் மீது போடப்பட்டால் கோர்ட்டில் செல்லுபடியாகதாம்.  என்ன வேடிக்கை பாருங்கள்?!! பெண்ணியம் மட்டும் பேசும் பெண் சமூக ஆர்வலர்கள், பாலியல் குற்றத்திற்குப் போராட்டம் நடத்துகிறார்கள். ஆனால், விபச்சாரத்திற்கு எதிராக ஏன் போராடுவதில்லை? (ஓரளவு பெண்கள் மீது உள்ள ஆக்கிரமிப்பு குறைவதற்கு காரணம் விபச்சாரம் என்ற கருத்தும் இருக்கிறது).  ஒரு பெண் தன் உடலை வெளிப்படுத்தி சினிமாவிலும், ஊடகங்களிலும், விளம்பரங்களிலும் நடித்தால், அதுவும் தேவை இல்லாமல் நடித்தாலும் இந்த பெண் சமூக ஆர்வலர்கள் ஏன் போராடுவதில்லை? அது பணம் ஈட்டும் தொழில் என்பதாலா?  அப்படியென்றால் இங்கு மட்டும் மானத்தை விட பணம் முக்கியப் பங்கு வகிக்கிறது இல்லையா? பெண்ணியம் பேசும் பெண் சமூக ஆர்வலர்கள் ஒரு ஆண் குடித்தால், புகைத்தால் அதைக் குற்றப்படுத்துகிறார்கள். ஆனால் அதே குடி, புகை எல்லாம் பெண்களும் தான் நகரங்களில் உள்ள pub களில் செய்கிறார்கள். அது எப்படி இவர்கள் கண்ணில் படாமல் போகிறது? ஏன் ஆணை மட்டும் சட்டம் வதைக்கிறது?


     ஆண் குழந்தையையும், பெண் குழந்தையையும், பேதம் பார்க்காமல், வாழ்க்கையை எப்படி நோக்க வேண்டும் என்றும், எப்படிக் கையாளவேண்டும் என்றும், உளவியல் ரீதியாக ஒரு பெண்ணின் தன்மை என்ன, ஒரு ஆணின் தன்மை என்ன, பெண், ஆணை எப்படிப் புரிந்து கொள்ளவேண்டும், ஒரு ஆண் பெண்ணை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்று பருவ வயதிலேயே சொல்லிக் கொடுக்கப்பட்டால் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கலாம். ஒரு ஆணிற்கும், அந்த்தந்த வயதில் கொடுக்கப்படவேண்டிய மரியாதையைக் கொடுத்து, அவன் தன் சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளத் தக்க வகையில் பெண்ணும், இந்த சமூகமும் செயல்பட வேண்டும். எனவே, ஒரு ஆணிற்கும் உணர்வுகள் உண்டு, அவனுக்கும் மனது உண்டு. உளவியல் ரீதியாகவும், பயாலாஜிக்கல் ரீதியாகவும் ஒரு ஆணின் தன்மையை மனதில் கொண்டு, அதை ஆணிற்கும், பெண்ணிற்கும் தக்க வயதில், வீட்டில் பெற்றோரும், பள்ளியிலும், கல்லூரியிலும் உளவியல் ஆலோசகராலும் பகிரப்பட்டு  உணர்த்தி, இந்த சமுதாயத்தில் உள்ள ஆண்களும் பெண்களும் ஒருவரை ஒருவர் புர்ந்து கொண்டு வாழ்ந்தால் ஒரு நல்ல சமுதாயம் உருவாகும்.

பின் குறிப்பு :

நான் இந்தப் பதிவை அடித்து முடித்து விட்டு என் நண்பர் துள்சிதரனுடன் கலந்து பேசி அவரது கருத்துக்கள், மாற்றங்கள் எல்லாம் எடிட் செய்து கொண்டிருந்த போது, என் மகனின் நண்பர்கள் வருகை. அவர்கள் கேட்க நான் இந்தப் பதிவைப் பற்றிச் சொல்ல, அவர்கள் இந்தப் புத்தகத்தைப் பற்றிச் சொன்னபோது “Men are from Mars, Women are from Venus” – John Gray.   வாசித்தேன்.  நல்ல புத்தகம்.  ஏராளமான நல்ல கருத்துக்களைக் கொண்ட புத்தகம். இதை வாசிக்காதவர்கள் இதை வாசித்துப் பார்க்கலாம் என்பதற்காக இங்கு கொடுத்துள்ளேன்.




10 கருத்துகள்:

  1. சரியான... மிகச் சரியான ஆழ்ந்த அலசல்...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. நன்றி! உங்கள் வாசிப்பிற்கும், கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
  3. நல்ல பதிவு!
    +1
    சில மாற்றங்கள் செய்தால் உங்கள் பதிவுகள் தமிழ் மனத்தில் தானகவே மகுடம் ஏறும்!

    பதிலளிநீக்கு
  4. மிக நன்றி! நம்பள்கி! வோட்டிற்கும் சேர்த்துதான்! உங்கள் suggestion க்கு நன்றி! கண்டிப்பாக மாற்றங்கள் செய்ய முயற்சிக்கிறோம். ஆனால், என்ன மாற்றங்கள் என்பது தான் தெரியாமல் இருட்டில் தப்பி இருக்கிறோம். பரவாயில்லை, நம்பள்கி என்னும் நக்கீரனின் வார்த்தைகளும், கருத்துக்களுமே (மிக கௌரவமாக இருக்கிறது) + மற்ற வாசகர்களின் கருத்துக்களும், வார்த்தகளும் தமிழ் மண மகுடம் ஏறியது போலத்தான். இருக்கும் 5, 6 வாசகர்களின் பின்னூட்டங்களே எங்களுக்கு மிகுந்த சந்தோஷத்தைத் தருகிறது! பின்னூட்டங்கள் இல்லை என்றாலும் பலர் பார்க்கிறார்கள், வாசிக்கிறார்கள் என்பதே எங்களுக்கு இதமாக இருக்கிறது. என்றாலும், உங்கள் கருத்தினை ஏற்று மாற்றங்களைக் குறித்து யோசித்து, ஆராய்ந்து எங்களால் முடிந்த அளவு செய்ய முயற்சி செய்கிறோம்!. மிக்க நன்றி! (நக்கீரன்!!!!) நம்பள்கி! (நந!) - துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு
  5. முதலில் இச் சமூகம் ஆண்களை துன்பங்களையும், சோகங்களையும், கவலைகளையும் வெளிக்காட்ட இயலாமல் மனதுக்குள் போட்டுப் புதைக்கக் கற்றுக் கொடுக்கின்றது. ஆண் கண்ணீர் விட்டால் ஏளனம் செய்கின்றது. அவமானமாகச் சித்தரிக்கின்றது. அது போக ஆண்களைப் பணம் உண்டாக்கும் மெசினாகவும் பாவிக்கின்றது. குடும்பம் நடத்த ஆணே பாரம் சுமக்க நிர்பந்திக்கப்படுகின்றான். ஆண், பெண் இருவரும் கல்வி கற்று வேலைக்குப் போய்ச் சம்பாதிக்கும் இக்காலத்தில் சம்பாத்தியம் இல்லாமல் ஒரு பெண் குடும்ப உறவுக்குள் இணைய முடியும், ஆனால் ஆண் சம்பாதித்தே ஆக வேண்டும் என நிர்பந்திக்கப்படுகின்றான். அத்தோடு ஆண்கள் பலரும் சமூகக் குற்றத்தின் முழுப் பொறுப்பாளியாகவும் பார்க்கப்படுகின்றான். ஆனால் அதே சமூகக் குற்றத்தில் ஈடுபடும் பெண்களை இச் சமூகம் கண்டும் காணாமலும் போய் விடுகின்றது. ஆண்கள் பலரும் ஆண்களாலும், பெண்களாலும் பாலியல் பலாத்காரத்துக்கும், உளவியல் அழுத்தங்களுக்கும் இன்னும் பல வன் கொடுமைகளுக்கு உள்ளாகுகின்ற போதும், அதிலிருந்து அவனைக் காக்க சமூகம் முன்வருவதில்லை. ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையே நிலவும் சமூக இடைவெளி குறையவேண்டும் என்கிறார் பெரியார். சட்டத்தின், சமூகத்தின் பார்வையில் ஆண், பெண் சமத்துவமாக நடத்தப்பட தன்னியல்பில் வளர்ச்சி பெறவும், சமூகத்தில் பங்காற்றவும் வழி செய்ய வேண்டும்.

    --- விவரணம் இணையதளம். 

    பதிலளிநீக்கு
  6. உங்கள் அருமையான கருத்துக்களுக்கு மிக்க நன்றி. சொல்லப்போனால், "முதலில் இச் சமூகம் ஆண்களை துன்பங்களையும், சோகங்களையும், கவலைகளையும் வெளிக்காட்ட இயலாமல் மனதுக்குள் போட்டுப் புதைக்கக் கற்றுக் கொடுக்கின்றது. ஆண் கண்ணீர் விட்டால் ஏளனம் செய்கின்றது. அவமானமாகச் சித்தரிக்கின்றது" "சம்பாத்தியம் இல்லாமல் ஒரு பெண் குடும்ப உறவுக்குள் இணைய முடியும், ஆனால் ஆண் சம்பாதித்தே ஆக வேண்டும் என நிர்பந்திக்கப்படுகின்றான்." இந்தக் கருத்துக்களையும் நான் குறித்து வைத்திருந்தேன். இடுகையை அடிக்கும் போது அது தவறி விட்டது. ஏதோ ஒரு குறை எனக்குத் தோன்றிக் கொண்டே இருந்தது அதை இங்கு தாங்கள் கொடுத்தமைக்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  7. வணக்கம்

    பதிவின் இறுதியில் கூறியதைப்போல ஆண்களும் பெண்களும் ஒருவரை ஒருவர் புர்ந்து கொண்டு வாழ்ந்தால் ஒரு நல்ல சமுதாயம் உருவாகும்....அருமையாக சொன்னிர்கள் வாழ்த்துக்கள்

    எனது புதிய வலைப்பு உங்களை அன்புடன் வரவேற்கிறது இதோமுகவரி-http://tamilkkavitaikalcom.blogspot.com

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  8. மிக்க நன்றி நண்பரே!! நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் மிக அருமை! நல்ல நோக்கத்துடன் இருக்கிறது!!

    எங்கள் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்!!!

    பதிலளிநீக்கு
  9. எங்கு பார்த்தாலும் பெண் விடுதலை பெண் உணர்வுகள் பெண்களுக்கு பாதுகாப்பில்லை இப்படியே பேசவும் முழக்கமிடவும் கேட்டிருக்கிறோம். ஆணின் உணர்வுகளை புரிந்துகொள்ள முயற்சிபபதில்லை. ஆணும் பெண்ணும் சரிசமம் என்ற நிலை உருவாக வேண்டும். நல்லதொரு விழிப்புணர்வுக் கட்டுரைங்க. பின்னூட்ட கருத்துகளையும் படித்தேன்.

    பதிலளிநீக்கு
  10. மிக்க நன்றி சசி....தங்களின் கருத்திற்கு/....இருவரையுமே சமநிலையில் பார்த்து வளர்த்துவிட்டால் இது போன்ற பிரச்சனைகள் வராதுதான்....

    பதிலளிநீக்கு