வெள்ளி, 27 டிசம்பர், 2013

ஒட்டகத்திற்கு இடம் கொடுத்த கதை போல், மனிதனுக்கு பூமியில் இடம் கொடுத்தது இறைவன்/இயற்கை செய்த தவறோ!!??


தாய் ஒட்டகமும் குட்டி ஒட்டகமும் பேசிக்கொண்டிருந்தன. 'அம்மா, எனக்கு சில கேள்விகள் இருக்கு.  கேக்கலாமா?

அம்மா: கேளு மகனே! ஏன்? ஏதாவது பிரச்சினையா?


“அம்மா,  நமக்கு ஏன் திமில் இருக்கு?

“மகனே நாம பாலைவனத்துல வாழற விலங்கு.  இந்தத் திமில் தான் நமக்குத் தண்ணீர் சேமித்து வைக்க உதவும். நாம தண்ணீர் இல்லாமலே கூட வாழ்ந்துடுவோம். அதற்கு பேர் போனவர்கள்.

“அம்மா நமக்கு ஏன் காலெல்லாம் ரொம்ப நீளமா இருக்கு?  என்று கேட்டது குட்டி.

“பாலவன மணல்ல நடக்கணும்னா, கால் நீளமா இருந்தால்தான் வசதி.  அதான் என்றது தாய்.

“அம்மா நமக்கு ஏன் கண் இமை முடிகள் எல்லாம் நீளமா இருக்கு?

“அப்போதான் காத்தடிக்கும் போது பறக்கும் பாலைவனத்து மணலெல்லாம் கண்ணுக்குள் புகாது

“நம்ம தோல் ஏம்மா சொர சொரனு ரொம்ப கெட்டியா இருக்கு?

“பாலைவனத்துல வெயிலும், குளிரும் கடுமையா இருக்கும்ல. அதை தாங்கிக்கிறதுக்காக தோல் கெட்டியா இருக்கு

“எல்லாம் சரிம்மா, அப்போ நாம் ஏன் பாலைவனத்துல இல்லாம இங்க ஜூவுல இருக்கோம்? என்று குட்டி கேட்ட கேள்விக்கு தாயிடம் பதில் இல்லை.


-----------------------------------------------------------------------------

தாய் ஒட்டகத்திடம் பதில் இல்லையாக இருக்கலாம்பாவம்! ஆனால், அதற்கு பதில் இதோ. குட்டி ஒட்டகமே நாங்கள், மனிதர்கள் தான் காரணம். நாங்கள் சுயநலவாதிகள்.  அதுதான் காரணம்.  மேலே அந்த ஒட்டகத்தைப் பற்றிய சிறு கதையைப் படித்தவுடன் தந்தையின் மனதில் பல எண்ணங்கள் தோன்றத் தொடங்கியது கட்டுரை வடிவில்.

மனிதன் குரங்கிலிருந்து வந்து பரிணாம வளர்ச்சியில் மேலே உச்சியில் இருந்தாலும், ஆதி மனிதன் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த நிலை படிப்படியாக, மனிதன் சுயநலத் தேவையை ஒட்டி சிந்திக்கத் தொடங்கியதாலும், அவன் முடிவுகள் எல்லாமே சுயநலம் சார்ந்ததாக இருந்ததாலும், அதனால் ஏற்பட்ட அறிவியல் வளர்ச்சியினாலும் இன்று, மனிதன் வாழும் இந்த பூமியில் இயற்கையும், விலங்கினங்களும் கூட எதிரியாகி விட்டதோ என்று நினைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். சுயநலம் அதிகரிக்கும்போது மனிதன் இயற்கையை விட்டு விலகுகிறான். இயற்கையைச் சுரண்ட ஆரம்பிக்கின்றான். காண்கீரீட் காடுகளை வளர்க்கிறான். 5 அறிவு படைத்த விலங்குகள் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த, முன்பு காணப்பட்ட பல உயிரினங்கள் இன்று பூமியிலிருந்து அடியோடு அழிந்து விட்டன. பூமி வெப்பமாகுதலால், அவற்றால், இப்போது ஏற்படும் மாறுபட்ட பருவநிலையில் வாழ முடியவில்லை. மனிதனின் சுயநலம் அந்த அளவு வளர்ந்து விட்டது. விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் இந்த பூமியில் இடம் இல்லாமல் போகிறதால், அவைகளை ஒரு சின்னக் கூண்டுக்குள், இல்லை சின்ன ஏரியாவுக்குள் அடைத்து வனவிலங்கு உயிரியல் பூங்கா (zoo), இல்லை இயற்கை வனவிலங்கு உயிரியல் பூங்கா என்று ஒட்டி, பணம் பார்க்கிறோம். இதில் சில இடங்களில் இவை சர்க்கஸ் கூட செய்யும்!! 

இயற்கை தனக்கென்று எதுவும் சேமித்து வைத்துக் கொள்ளாமல்,  தான் சேர்ப்பது எல்லாவற்றையும் நம் மனித குலத்திற்காக எந்தவித பிரதிபலனையும் எதிர்பாராமல் தரும் போது, அந்த இயற்கையைக் காப்பாற்றாமல், அதற்குத் தீங்கு இழைப்பது  மனிதனின் ஒரு குரூரமான, சுயநலமிக்கச் செயல் அல்லாது வேறு என்ன என்று சொல்ல முடியும்? அது நமக்கு உதவும் பங்கில் ஒரு துளியாவது நாம் அதற்குத் திரும்பத்தருகிறோமா?  (கல்யாணம் போன்ற விசேஷங்களில் ஒருவர் நமக்கு என்ன மொய் வைக்கிறார் என்று ஆராய்வதில் நாம் படு கில்லாடிகள்.  பதில் மொய்?!!! மூச்சு!! மொய் வைப்பவர்களைப் பற்றி இங்கு பேச்சு இல்லை).
 
இயற்கையிடமிருந்து மனிதன் கற்றுக் கொள்ள நிறையவே இருக்கிறது. அது நமக்குத் தரும் பயன்களை ஜாதி, மதம், ஏழை, பணக்காரன், இனம், மொழி பார்த்துத் தருவதில்லை.  நதிகளும், ஏரிகளும், குளங்களும், கிணறுகளும்  நமக்கு ஜாதி பார்த்து, மொழி பார்த்து நீர் தருவதில்லை. பார்க்கப் போனால் நாம் தள்ளும் அழுக்கையும், கழிவையும் அது சுமந்து கொண்டுதான் போகிறது.!! 

ஆனால், இங்கு “எலேய் அந்த வாய்க்கா தண்ணி அந்த சாதிக்காரன் ஊருக்குள்ள போகுது......அவன் வயலுக்கு.  அந்த வாய்க்கால தடுக்கணும்லேய்”. 

“இந்தக் கிணத்துல மத்த ஜாதிக்காராலாம் வந்து தண்ணி இறைக்கப்டாது. தீட்டு படறது. 

“இந்தப் படித்துறைல நீங்கள்லாம் வந்து குளிக்கப்படாது.  துணி தோய்க்கப்படாது.

நதி நீருக்கும், அணை நீருக்கும், மாநிலத்திற்கிடையே சண்டைகள்!

சுயநலம் என்பது மனிதனின் குணம். அதில் விதி விலக்கு என்பதே யாரும் கிடையாது. அப்படி ஒருவர் இருந்தால் கண்டிப்பாக அவர் மனிதரா என்ற சந்தேகம் வரத்தான் செய்யும்.  ஏன் அப்படி என்று கேட்கின்றீர்களா? சொல்லுகிறேன்.  மனிதன் விலங்குகள் வளர்ப்பது கூட ஒன்று உணவிற்காக, சுமைதூக்க, பாரம் இழுக்க, இல்லை புண்ணியத்திற்காக! அதில் பசு வளர்த்தால் புண்ணியம் கிடைக்கும் என்ற ஒரு எதிர்பார்ப்பு, சுய நலம். விலங்குகள் எல்லாம் தங்கள் குணங்களை நேருக்கு நேர் காட்டி விடும்.  நடிக்கத் தெரியாது! (அப்போ தேவர் ஃப்லிம்ஸ், ராமநாராயணன் படத்துல எல்லாம் நடிக்குதேனு நீங்க கேக்கக் கூடாதுங்க!!) ஆனால், மனிதன் உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசி, அடுத்தவனைக் கவுக்க நினைப்பதில் கைதேர்ந்த நடிகன்.

மரங்கள் வளர்ப்பதிலும் கூட சுயநலம்தான். போனால் போகட்டும்! மரம் வெட்டினால் திரும்ப நட வேண்டும் என்ற சிந்தனை 6 அறிவு படைத்த மனிதனுக்குத் தோன்ற வேண்டாமா? துளசி வளர்த்தால் புண்ணியம். மரம் நட்டால் புண்ணியம். அதில் கூட சுயநலம். மனிதனுக்கு மனிதன் உதவி செய்வதில் கூட! உதாரணமாக, கல்விக்காகச் செய்யும் உதவியிலும், ஆடையும், அன்னமும் தானமாக வழங்குதலிலும் கூட புண்ணியம் என்பதுதான், மனித நேயத்தை விட முன் நிலைப்படுத்தப்படுகிறது! சமுதாயத்திற்காகச் சேவை செய்வது கூட அதுவும் அறக்கட்டளை என்ற பெயரில், பணத்திற்காகவும், புகழுக்காகவும், சுய விளம்பரத்துக்காகவும்தான் என்று ஆகி விட்டது.  ஏன் நீங்கள் ஏதாவது அறக்கட்டளைக்கோ இல்லை, சமுதாயத் தொண்டு நிறுவனத்துக்கோ பணம் செலுத்தினால் அதற்கு கூட வருமான வரித்துறை விலக்கு அளிக்கிறது!! அப்படியாவது மக்கள் முன்வருகின்றார்களா என்பதற்காகத்தான்! 

மது விற்கும் பெண்மணி ஒருத்தி இருந்தாள். அவளுடைய கணவன் எப்போதும் அவளிடம், "ஏய், நம்ம கடைக்கு அதிகமான ஆட்கள் மது அருந்த வரவேண்டும்.  அதுக்காக நீ தினமும் பிரார்த்தனை செய்ய வேண்டும்" எனக் கூறுவான்.

ஒரு நாள் குடிக்கவந்த ஒருவன், இந்தப் பிரார்த்தனையைக் கேட்டான். அவன் அந்தப்பெண்மணியிடம், "எனக்கும் அதிகம் ஆர்டர்ஸ் கிடைப்பதற்காக நீங்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும். என்றான்.

"உங்கள் வேலை என்ன?" என்று அவள் கேட்டதற்கு, "சவப்பெட்டி தயாரித்தல் என்றான். 

அவனும், ஏன் நாமும்தான் ஒரு நாள் அந்தச் சவப் பெட்டிக்குள் தான் போக வேண்டும் என்பதை அவன் மட்டும் அல்ல நாமும் அறியாமல் இல்லை. இந்த பூமியின் நிலை அப்படித்தான் மாறி உள்ளது.

மகாத்மா காந்தியும், "இந்த பூமியில் நம் எல்லோரது தேவைகளையும் பூர்த்தி செய்யப் போதுமான வளங்கள் இருக்கின்றன. ஆனால், ஒரு தனிமனிதனின் பேராசையை நிறைவேற்ற அதனால் முடியாது'. இப்படிப்பட்ட பேராசைதான், இன்று நம் இயற்கைச் சூழல் நாசமானதற்கும், இயற்கை வளங்கள் வற்றிப் போனதற்கும், இயற்கைப் பேரழிவுகளுக்கும் காரணமாக உள்ளது என்பது கசப்பான உண்மையாகும்.

------------------------------------------------------------------------------

எழுதி விட்டு, சோர்வு அகல தந்தை எழுந்து நடக்கிறார்.  அங்கு பையன் வந்து அவர் எழுதியதைப் படிக்கிறான்.

மகன் தந்தையிடம்: அப்பா நமக்கு மட்டும் ஏன் ஆறறிவு? அந்த ஒட்டகம், மத்த விலங்குகளுக்கு எல்லாம் ஏன் 6 அறிவு இல்லை?

தந்தை : அது பரிணாம வளர்ச்சியால் சாத்தியமான ஒன்று.

மகன் : சரி அப்போ 6 அறிவு என்றால் என்ன?  அதனால் என்ன பயன்?

தந்தை: 6 வது அறிவு என்பது சுயமாகச் சிந்திக்க உதவுவது.  அது நன்மை தீமைகளை ஆராயும், பகுத்தறிவு!.  அதுதான் விலங்குகளுக்கும், நமக்கும் உள்ள வித்தியாசம்.

மகன் : அது சரி! அப்படியென்றால், ஓரறிவிலிருந்து, 5 அறிவு படைத்த விலங்குகள் எல்லாம் இயற்கையோடு ஒன்றி வாழ முடியும் போது ஆறறிவு படைத்த மனிதனால் ஏன் ஒன்றி வாழ முடியவில்லை? எவ்வளவோ கண்டுபிடித்து, அறிவியலில்  முன்னோடிகளாகத் திகழ்வதாகப் பறை சாற்றுகின்ற 6 அறிவு மனிதானால் ஏன் மரணத்தை வெல்ல முடியவில்லை?

கட்டுரை எழுதிய தந்தையிடம் பதில் இல்லை.

அப்பா உங்கள் கட்டுரையை இப்படி முடிக்க முடியுமா என்று பாருங்கள்!

பார்க்கப்போனால், மனிதன் தன் குழியைத் தானே வெட்டிக் கொள்கிறான்.  தனக்கு மட்டுமல்ல, இந்த பூமிக்கும் சேர்த்துத்தான்! மனிதன் தன் 6 அறிவால் இந்த உலகை ஆள நினைத்து இயற்கையோடு ஒன்றி வாழாமல், இயற்கையைக் கவனிக்காமல் போனால், நாளை மனிதனின் நிலையும், பருவநிலையுடன் இணைந்து செல்ல முடியாமல், காணாமல், அழிந்து போன விலங்குகள் பட்டியலில் மனித இனம் சேர்ந்து விடும். 6 அறிவு படைத்தவன் சிந்திக்கத் தெரியவில்ல என்றால், 5 அறிவு படைத்த விலங்குகள் தானே!!? அதனால் மனிதனுக்கு காங்க்ரீட் ஜூ ரெடி!!


This is like being in a tiny cage in the human zoo—one of the ones that is made of concrete and bars instead of natural landscaping and water features.

இந்தப் பூமி வெகு சீக்கிரம் பாலைவனமாகி விடும். குட்டி ஒட்டகங்கள் ஜூவிலிருந்து விடுபட்டு சந்தோஷமாக வாழட்டும்!!!. அந்தக் குட்டி ஒட்டகத்திடம் சொல்லுங்கள்! பாலைவனம் ரெடி என்று!


19 கருத்துகள்:

 1. ஆறறிவு உள்ளதாகக் கூறப்படும் மனிதன்தான் குறை அறிவு உயிரினங்களுக்கும் கீழாய் செயல்படுகிறான் ,இதை புதிய வடிவத்தில் நீங்கள் சொன்னவிதம் நன்று !
  த. ம 2

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரொம்பச் சரியாகச் சொன்னீர்கள்! பகவான் ஜி!! மிக்க நன்றி பாராட்டிற்கு!! ஓட்டிற்கும்!

   நீக்கு
 2. வணக்கம்
  நண்பரே.

  மிகச்சரியாக சொன்னீங்கள் ...பாலைவனமாக ஆயிற்று என்று சொல்லலாம்
  .ஒட்டகத்திடம் சொல்லுங்கள்! பாலைவனம் ரெடி என்று! சொல்லியாச்சி.
  அருமையாக எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சொன்னதற்கு மிக்க நன்றி சகோதரரே!! கருத்திற்கும், வாழ்த்திற்கும் நன்றி!!

   நீக்கு
 3. உண்மைதான் நண்பரே,
  ஆறறிவால் விரைவிலேயே உலகே பாலைவனமாகிவிடும்
  நன்றி நண்பரே
  த.ம.4

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி தங்கள் கருத்திற்கும் வருகைக்கும்!! ஓட்டிற்கும்!!

   நீக்கு
 4. உதாரணக் கதைகளோடு சொன்ன விதம் அருமை... முடிவில் சொன்னது தான் நடக்கப் போகிறதும் உண்மை...

  பதிலளிநீக்கு
 5. ஆழமான கருத்துடன் கூடிய
  அற்புதமான அவசியமான பதிவு
  இருமுறை படித்து மகிழ்ந்தேன்
  தங்கள் பதிவுகளைத் தொடர்வதில்
  பெருமிதம் கொள்கிறேன்
  பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த
  நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இருமுறை படித்து மகிழ்ந்தேன்
   தங்கள் பதிவுகளைத் தொடர்வதில்
   பெருமிதம் கொள்கிறேன்

   ரொம்ப சந்தோஷமாக இருக்கின்றது! தங்கள் இந்த ஊக்கத்திற்கு மிக்க நன்றி!! மகிழ்ச்சியாகவும் உள்ளது!! க்ருத்திற்கும், ஊக்கத்திற்கும் மிக்க நன்றி!!

   நீக்கு
 6. உண்மைதான்.இயற்கையே நமக்குப் பாடத்தையும் கற்றுத் தருகிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி! உண்மைதான் !தங்கள் கருத்திற்கும், வருகைக்கும்!!

   நீக்கு
 7. +1 படங்கள் பெரிதாக இருந்தால் நன்றாக இருக்கும்!

  பதிலளிநீக்கு
 8. ஆண்டின் முடிவில் தாங்கள் எழுதியுள்ள சிந்தனையைத் தூண்டிச் சவுக்கடி கொடுக்கும் பதிவு. அடிக்கடி இப்படியே எழுதுங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாருங்கள் ஐயா!! மிக்க நன்றி ஐயா!! தங்கள் மேலான கருத்திற்கு! கண்டிப்பாக எழுதுகிறோம்!! தங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி!!

   நீக்கு
 9. ஒட்டகத்தின் கேள்வியும் பதிலுமாக அமைந்த உரையில் நம் சுயநலத்தின் வெளிப்பாட்டை மிகச்சரியாகச் சொல்லிச் சென்றீர்கள்.
  அதிலும் பாவம் புண்ணியம் மற்றும் நமக்கான தேவை இதை கருத்தில் வைத்தே நாம் இயற்கையை நேசிப்பதாக நடிப்பதும் வளர்ப்பதும் என்ற உண்மையைச் சொன்னீர்கள் எத்தனை பேருக்கு இதை ஒப்புக்கொள்ள தைரியம் இருக்கும்?
  6 அறிவு பற்றிய கேள்விக்கு பதில் தர முடியாமல் பாலைவன முடிவைச்சொன்னதும் மிகவும் பொருந்தும்.
  6 அறிவு படைத்த மக்களால் தான் அழிவும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சகோதரி சசி! தாங்கள் இப்படித் தேடி வாசிப்பது எங்களுக்கு மிகவும் மகிழ்வாகவும், உற்சாகம் அளிப்பதாகவும் இருக்கின்றது. ஊக்கமளிப்பதாகவும்...எதிர்பார்க்கவில்லை....மிக்க நன்றி மீண்டும்...

   நீக்கு