திங்கள், 16 டிசம்பர், 2013

வேலி பயிரை மேய்கிறதா?.... சுய நினைவு இழந்தவன் பசி என்று சொல்லித் தன் உடல் பாகங்களைக் கடித்துத் தின்கின்றானா?கொடுமைகள் தொடர்கதைகள் ஆகிறது. குழந்தையின் கை வளர்கிறதா? கால் வளர்கிறதா? என்று பார்த்து வளர்க்கும் பெற்றோர்களைக் கண்டும், அவர்களைப் பற்றிக் கேட்டும், வளர்ந்த நாம் இக் கேடுகெட்டத் தகப்பனை (கையும் காலும் வளர்வதை கடித்துத் தின்னக் துடிக்கும் மிருகம் போன்றவனை) குறித்துக் கேட்கும் போது வாயடைத்துப் போகிறோம். ஒன்றும் புரிய வில்லை. இப்படிப்பட்ட சம்பவங்கள் நடக்காமல் இருக்க யார் என்ன செய்ய வேண்டும் என்பதறியாமல் குழம்பிப் போகிறோம்.கேரளா காசரகோடு அருகே உள்ள கும்பளையில் இருந்து +2 படிக்கும் 17 வயதுள்ள மாணவி ரயிலேறி திருவனந்தபுரம் சென்று ரயில்வே ஸ்டேஷனில் ஆட்களினிடையே பசியையும், தாகத்தையும் பொருட்படுத்தாமல் ஓரிரு நாட்கள் தங்கி இருக்கிறாள். அக் கூட்டத்தினிடையே இருப்பதுதான் பாதுகாப்பு என்று அவளுக்குத் தோன்றி இருக்க வேண்டும்.  சந்தேகித்த ரயில்வே போலீஸார் அவளை விசாரித்தப் போதுதான் தெரிய வந்தது, “உயிரீந்தத் தந்தையே கடந்த 5 மாதங்களாக, தன்னைத், தான் பாதுகாப்பாக வளர வேண்டிய வீட்டில் வைத்தே பாலியல் பலாத்காரம் செய்த திடுக்கிட வைக்கும் சம்பவத்தைப் பற்றி.  இக் கொடுமையை சகிக்க முடியாமல், யாரிடமும் சொல்ல முடியாமல், வேறு எங்கும் போக வழியில்லாமல் பாவம் அந்தப் பெண், இப்படி ஒரு வழியைத் தேர்ந்தெடுத்தாள்.  எப்படியோ அந்த இளம் மனதில் தற்கொலை செய்யத் தோன்றவில்லையே என்பதை நினைக்கையில் இறைவனுக்கு நன்றி சொல்லத் தோன்றுகிறது. அந்த இளம் பெண்ணைப் பாராட்டத் தோன்றுகிறது. திருவனந்தபுரம் ரயில்வே போலீஸார் 15.12.2013 ஞாயிறு அன்று அந்த மாணவியை காசரகோடு அருகே உள்ள கும்பளா போலீஸ் ஸ்டேஷனில் கொண்டு சென்று ஏற்பித்தனர். கும்பளா போலீஸ், மனித உடல் உள்ள மிருகமான அந்த ஆரிக்காடி கடவத்து அப்துல் ரஹ்மானை - 43 வயது - கைது செய்து திங்கள் அன்று நீதி மன்றத்தில் ஆஜராக்கி இருக்கிறது. 


உடலை பாதிக்கும் கான்சர் போல மனதை பாதிக்கும் இந்த கான்சர் உள்ள மன நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் நம் நாட்டில் கூடி வருகிறது.  இந்த நோய் பாதித்தவர்களுக்கு தண்டனை கொடுப்பதோடு மட்டும் நில்லாமல், இந்நோய் புதிதாய் யாருக்கும் பிடிபடாமல் பார்ப்பதுடன், இந்நோயாளிகளிடமிருந்து பெண்குழந்தைகளைக் காக்கவும் வேண்டும். மன நிலை பாதிக்கப்பட்டது குழந்தையின் தாயே ஆனாலும் அக்குழந்தையை அத்தாயிடமிருந்து காப்பாற்ற வேண்டியது மற்றவர்களுடைய, மன நிலை பாதிக்கப் படாதவர்களுடைய கடமை.  பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவகங்களிலும் மட்டுமல்ல ஒவ்வொரு வீட்டிலும் எல்லோரும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.  பாதிக்கப்பட்டவர்களைப் பற்றியோ,  பாதிப்பு ஏற்படுத்துபவர்களைப் பற்றியோ ஏதேனும் சிறு தகவல்கள் கிடைக்கவோ, சிறு சந்தேகம் எழவோ செய்தால் அதை உதாசீனப் படுத்தாமல், உரியவர்களிடம் அதைப் பற்றிக் கலந்து ஆலோசித்து ஆவன செய்ய வேண்டும். வேலியே பயிரை மேய்கிறது. நாம் என்ன செய்ய? என்று சொல்லி கையைக் கட்டி நிற்காமல், அந்தப் பயிரைக் காக்க நமக்கு என்ன செய்ய முடியுமோ, அது வாக்கால் ஆனாலும் சரி, செயலால் ஆனாலும் சரி, அதை செய்யத் தவறக் கூடாது.  

15 கருத்துகள்:

 1. +1
  சில சமயங்களில் நல்ல பதிவாக இருந்தாலும் கருத்துக்கள் என்னிடம் இல்லையென்றால்--அதாவது இரண்டு பக்க வாதங்களையும் நீங்களே வைத்து விட்டால் நான் வோட்டு போடுவதுடன் சென்று விடுவேன்.

  என் பல இடுகைகளைப் பார்த்தல்--விவாதிக்கும் போது-நான் முடிந்த வரைக்கும் இரண்டு பக்க வாதங்களையும் வைத்து பிறகு தான் என் நிலைப்பாட்டை செல்வேன்.

  அப்ப கருத்துகளுக்கு இடம் இருக்காது! இது பலர் என்னிடம் கூறியது; அப்படி அதற்கு மேல் கருத்து இருந்தால் சிலர் எழுதுவார்கள்.

  உங்கள் இடுகைக்கு என் கருத்து பிறகு!

  பதிலளிநீக்கு
 2. அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...
  இன்னா சொல்றதுன்னே தெர்லபா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்னா கொட்மை பாரு நைனா! நன்றி நைனா கண்டுகினபா!! ஓட்டுக்கும்தான்!!

   நீக்கு
 3. எப்படியோ அந்த இளம் மனதில் தற்கொலை செய்யத் தோன்றவில்லையே என்பதை நினைக்கையில் இறைவனுக்கு நன்றி சொல்லத் தோன்றுகிறது. அந்த இளம் பெண்ணைப் பாராட்டத் தோன்றுகிறது. //தன்னம்பிக்கைவுள்ள அவளைப் பாராட்ட வேண்டும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் கவியாழி! நன்றி உங்கள் வருகைக்கும், கருத்திற்கும்!

   நீக்கு
 4. பதில்கள்
  1. கண்டிப்பாக இது ஒரு மகா கொடுமைதான். நன்றி! உங்கள் வருகைக்கும், கருத்திற்கும்!!

   நீக்கு
 5. கொடுமை, இந்த மாதிரி ஆட்களை என்ன செய்வது? வளர்ப்பு சரியில்லை என்றால் இவ்வாறு மனம் தறி கேட்டு அலையும்.

  பதிலளிநீக்கு
 6. " வளர்ப்பு சரியில்லை என்றால் இவ்வாறு மனம் தறி கேட்டு அலையும்" ரொம்ப சரியாகச் சொன்னீர்கள். உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 7. வணக்கம்
  என்ன கொடுமை.... இப்படியானவர்களை என்ன செய்ய வேண்டும் .....??

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கொடுமைதான்! நண்பரே! இவர்களுக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுக்கலாம்! நன்றி உங்கள் கருத்திற்கும், வருகைக்கும்!!

   நீக்கு
 8. வணக்கம்
  த.ம 4வது வாக்கு

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 9. என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.வீடு சுத்தமானால் தான் நாடு சுத்தமாகும் என்பது போல ஒவ்வொரு வீட்டிலிருந்தும் விழிப்புணர்வு பெற வேண்டும்.

  பதிலளிநீக்கு