வெள்ளி, 22 நவம்பர், 2013

மரணத்தின் விளிம்பில்
இந்தப் பதிவு, நம்மூர் ஆஸ்பத்திரிகள், பெயர் பெற்ற பெரிய்ய்ய, -அதுவும் எதற்கு? பணம் கறப்பதில் - அதற்கு உதவியாக இருக்கும் பெரிய Expert மருத்துவர்கள் பற்றியும், மரணத்தின் விளிம்பில் இருந்து கொண்டு இங்கு ஒரு காலும், அங்கு ஒரு காலுமாக இருக்கும் அதாவது உயிர்த்தெழுந்து ஒரு சில நாட்களாவது உயிர் வாழ்வாரா, இல்லை உடனடியாக இறையூருக்குப் பயணமா? என்று அல்லாடும் நெருங்கிய சொந்தக்காரர் – அவரையும் அவரைச் சுற்றி உள்ளவர்களைப் பற்றியும்தான்.. அதாவது, நம் மக்கள், வலியுடன் மரணத்தின் விளிம்பில் உள்ளவரை எப்படிப் பார்க்கிறார்கள்.


எனது சொந்தகாரர் 60 வயதைக் கடந்த  பெண்.  3 வருடங்களுக்கு முன் Ovarian Cancer –stage 3Cஅதாவது advanced stage ல் இருப்பதாகக் கண்டறியப்பட்டு அதற்கான சிகிச்சைகள் கொடுக்கப்பட்டு கடந்த மாதம் வரை நன்றாக, அவர் தன்னை நல்ல மனவலிமையுடன் வைத்துக் கொண்டு, கைவேலைகள், பல வகுப்புகள் சென்று தான் விரும்பிய கலைகள் கற்றுக்கொண்டு, இந்த மாதிரியான நோய்களுக்கு வேண்டிய மனோதைரியத்துடன், மிகுந்த உற்சாகத்துடன் வளைய வந்து கொண்டிருந்தார். நம் பெண்கள், கண்டிப்பாக அவரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று.  இதில் என்ன வேதனை என்றால் கண்டுபிடிப்பதற்கு முன் 2 ½ வருடங்களாக, அஜீரணக் கோளாரினாலும், அடி வயிறு உப்பியும், வலியுடனும் பல மருத்துவர்களைக் கண்டபின்னும் – இதில் 3 gynecologists  - ஒரு Gastroenterologist  அடக்கம் – எல்லா வகையான  ஸ்கான்களும், X-Ray என்று பல சோதனைகள் செய்தும், அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. Ascites  னால் தான் வயிறு உப்பி இருக்கிறது என்று சொல்லப்பட்டது. Reflux problem மும் இருந்தது.  அதற்கு ட்ரீட்மென்ட். Endoscopy test  இப்படிப் பல. ஆனால், உண்மையானக் காரணத்தை மட்டும் கண்டுபிடிக்க முடியவில்லை. 50வயதைக் கடந்தாலே இத்தனை அறிகுறிகள் இருக்கும்போது கான்சருக்கான டெஸ்ட் செய்ய்யச் சொல்லி டாக்டர்கள் சொல்லியிருக்க வேண்டாமா? மேலை நாடுகளில் எல்லாம் பெண்கள் 35 வயதுக்கு மேலேயே தவறாது கான்சர் செக்கப் செய்து கொள்கிறார்கள்.  சரி, இந்த வகை கான்ஸர் மற்ற வகைகளைக் கணக்கில் கொள்ளும்போது கண்டுபிடிப்பது சிறிது கஷ்டம் என்று கூறப்பட்டாலும், அவர்கள் ஏன் நோயாளியை ஒரு முழு செக்கப்பிற்கு உட்படுத்தவில்லை என்பது ஆச்சரியமாக இருந்தது. ஏன், differential diagnosis செய்ய(வ)தில்லை? மற்றொரு உறவினர் Radiologist ஆக இருப்பதால் அவர் தான். ‘எதற்கும் இன்னுரு தடவை Ultrasound Scan ஒண்ணு செய்து பார்க்கலாம்‘ என்று சொல்லி அழைத்துப் போக இதோ இன்று மரணத்தின் விளிம்பில். கண்டுபிடிக்கப்பட்டதும், உறவினர்களில் சிலர், “நல்ல குணம் உள்ளவங்களுக்கு எல்லாம் ஏந்தான் இப்படிக் கடவுள் சோதிக்கறாரோ. இல்ல, போன ஜென்மத்துல என்ன பாவம் செஞ்சாங்களோ “அவங்க பையன் வேறு ஒரு ஜாதிப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டான் இல்லியொ அதான் இவங்களுக்கு கான்சர் என்று, அம்மாவாசைக்கும் அப்துல்காதாருக்கும் முடிச்சுப் போட்டனர். வீடு நிறைய ஊரில் உள்ள பல ஸ்லோக புத்தகங்கள், Positive thoughts  புத்தகங்கள், CD க்கள, music files etc etcவந்து குமிந்தன. அவர்கள் தான் மருத்துவர் போல பல பல அறிவுரைகள், அதைப் சாப்பிடு, இதைச் சாப்பிடாதே....இப்படித்தான் என் ஒண்ணுவிட்ட, ரெண்டு விட்ட நாத்தனார், மாமியார், மூணுவிட்ட அக்கா இவர்களுக்கும் இதே மாதிரிதான்....அவங்க 6 மாசத்துல போயெ போயிட்டாங்க என்ற extra information. எப்படிப்பட்ட உறவினர் சமூகம்!!!  இப்படிப் பல பேச்சுக்கள் காற்றில் பரவ, அவர் மனவலிமையுடன், நோயுடன் போராடினார். டாக்டரே கூட “இவங்க 52 வாரங்களுக்கு முன்னாடியே இறந்திருக்கணும். Really, it is God’s grace! அவங்க  52 வாரம் கடந்து வாழ்ந்து வந்தது.!! அவரது மகனும், மருமகளும் அவரை மிக நன்றாக கவனித்துக் கொண்டார்கள். அவர்களுடைய அன்பான கவனிப்பும், அவரது மனவலிமையும், போராடும் குணமும், Positive சிந்தனைகளும் தான் காரணமாக இருக்கும்.


புற்று என்றாலே வளரும் என்பதுதான்  அதுவும் advanced நிலையில் உள்ள ஒன்று, அதன் வேலையை நிறுத்துமா? புற்று பரவுவதை நிறுத்தவில்லை. கடந்த 25 நாட்களாக தளர்ந்த நிலையில். சாப்பிட முடியாமல், சாப்பிட்டாலும் அது முழுவதும் வாந்தி எடுக்கும் நிலை. சென்றவாரம் மிகவும் தளர்ந்த நிலையில்திடீரென மூச்சுத் திணறல். 3 நாட்கள் முன்பு ஆஸ்பத்திரி சேர்க்கை. Critical care Unitl ல் சேர்க்கை.  யாரும் உள்ளே நுழையக் கூட முடியாத நிலை.  அவர்கள் மட்டும்.  அட்மிட் ஆன போது அவர்கள் almost இறந்து விட்டார்கள் என்றுதான் சொன்னார்கள்.  ஏதேதோ செய்ய அவர் கொஞ்சம் தன் நிலைக்கு வந்தார்.  டாக்டரிடம், என்ன காரணம்?  என்ன நடக்கிறது என்ற கேள்விகளுக்குப் பதில் இல்லை. என்ன செய்கிறார்கள் என்பதற்கும் பதில் இல்லை. “48 மணி நேரம் கழித்துத்தான் சொல்லமுடியும் என்ற பதில் ம்ட்டுமே.

“பையனுக்கு சொல்லிட்டீங்களா?  அவன் அமெரிக்கால இருக்கான் இல்லையா? - டாக்டர்

“அவன் அம்மா தளர்ந்து போய்ட்டாங்கனதும் அவன் கிளம்பி வந்துட்டுதான் இருக்கான்.  இன்னிக்கு ராத்திரி 11 மணிக்கு வந்துடுவான்.- கணவர்.

அடுத்த நாளும் அவர் சுய நினைவில் இருந்தாலும் நிலைமை என்னவோ அதே தான்.  ஏதேதோ டெஸ்டுகள். 

lungs சுற்றி காற்று arrest (pneumothorax-collapse of the lungs) ஆகியிருந்ததுனால...ஸோ...tube  போடணும்.....இதயம் வேகமாக அடிக்கிறது.  சாப்பாடு கொடுத்தால் வாந்தி வருவதால்...heart rate குறையாது ஸோ வயிற்றில் ட்யூப் போட்டு சாப்பாடு....என்று பல சொல்லி...முதலில் நுரையீரலுக்கு ட்யூப்.... ஆக்ஸிஜன் மாஸ்க்...இப்படி பல...பல.....
பார்க்கப் போனால், டாக்டரே, இறுதியில் “ஒருவேளை நுரையீரலுக்கு கான்சர் பரவியிருக்கலாம். முதலில் X-Ray. …என்று சொல்ல..ஆனால் அதில் ஒன்றும் தெரியவில்லை.  ஸோ...ultra sound scan, CT scan....

சரி, பரவியே இருக்கட்டும்.  இனி எந்த ட்ரீட்மெண்டும் பயனளிக்கப் போவதில்லை..என்றும் அவர்களே சொல்கிறார்கள். இருந்தாலும் 48 மணி நேரம் பார்ப்போம் என்பதற்கு என்ன அர்த்தம்? அப்படி இல்லை என்றால் நார்மல் ரூமுக்கு மாற்றி ஜஸ்ட் பேசிக் ட்ரீட்மென்ட் கொடுத்து – வலி நிவாரணி, ஆக்சிஜன், ட்ரிப்ஸ் – பார்க்கலாம் என்ற பதில்.  ஏன் டாக்டர்கள் தெளிவாக நோயாளியின் மகனிடமும், கணவரிடமும் உண்மையைச் சொல்லக் கூடாது? “இனி எந்த ட்ரீட்மென்டும் பயனில்லை என்று சொன்னாலும், “இப்பக் கொஞ்சம் stable ஆக இருக்காங்க ஸோ இன்னும் பார்க்கலாம் என்ற பதில். “இப்படிச் செய்வதால் ஒரு நாளைக்கு ரூ.65,000 லுருந்து ரூ.75,000 வரை செலவு. ஏன் டாக்டர்கள் நோயாளியின் மகனிடம் தெள்ளத் தெளிவாகக் கூறி வீட்டிற்கு அனுப்புவதில்லை? இது கிட்டத்தட்ட ‘ரமணா பட்த்தில் வருவது போலத்தானே இருக்கிறது?

என் கேள்வி. இப்படி மரண விளிம்பில் போராடுபவரை வீட்டிற்குக் கொண்டுவந்து, அவர் சுய நினைவில் இருப்பதால் அங்கு என்ன நார்மல் என்று சொல்கிறார்களோ அதையே வீட்டிலும் செய்யும் வசதி-ஒரு நர்ஸின் உதவியுடன் - இப்போதுதான் இருக்கிறதே. இல்லையென்றால் அப்படியே கூட அவரை துன்புறுத்தாமல் விட்டுவிடலாமே.  அவரே “எனக்கு mercy killing கொடுத்துவிடுங்கள் என்று சொல்லும் நிலை. ஏன் நம் மக்களால் செண்டிமென்டை விட்டு விலகி நின்று யதார்த்தமாக நோயாளியின் கோணத்திலிருந்து யோசிக்க முடியவில்லை? அவருக்கு வேண்டியது அமைதியான, அன்பான, ஒரு சூழ்நிலை.  எல்லோரும் அருகில் இருந்து அவருக்குப் பிடித்ததை செய்து மகிழ்வித்து, அவருடனேயே அருகில் அன்பாக இருந்து, இறப்பதற்கான ஒரு தைரியத்தையும், நம்மைச் சுற்றி எல்லாரும் இருக்கிறார்கள் எல்லோரையும் பார்த்துவிட்டோம் என்ற ஒரு மன நிறைவுடன், சந்தோஷமாக இறக்கும் அந்த நொடியை நாம் அவருக்கு கொடுக்கலாமே.  ஏன் நமது மக்கள் இன்னும் அந்த ஒரு மன நிலைக்கு, மனப் பக்குவத்திற்கு வரவில்லை.? 


8 கருத்துகள்:

 1. மிக நல்ல பதிவு. மருத்தவ பேர்களையெல்லாம் பூந்து விளையாடி இருக்கிறீர்கள்.
  Ascites வியாதி அல்ல. ஒரு வியாதின் அறிகுறி! எதனால் வந்தது என்று கண்டுபிடிக்க வேண்டும். லிவர் சிர்ரோசிஸ், கான்செர் இப்படி எதானாலும் வரலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் கருத்துக்கும், தவறைச் சுட்டிக் காடியதற்கும் மிக்க நன்றி! எதிர்பார்த்துக் காத்திருந்தேன்!. Ascites வியாதி அல்ல ஒரு அறிகுறி என்பதும் அவர்களுக்குத் டெஸ்ட் செய்யும் போது தெரிந்துகொண்டதுதான். இங்கு பதியும்போது தவறு நடந்து இட்டது. நீங்கள் சுட்டிக் காடியதும்தான் நான் அதைப் படித்துப் பார்த்தேன். நன்றி! நன்றி! திருத்தி விடுகிறேன்.

   நீக்கு
 2. உங்கள் கருத்துக்கும், தவறைச் சுட்டிக் காடியதற்கும் மிக்க நன்றி! எதிர்பார்த்துக் காத்திருந்தேன்!. Ascites வியாதி அல்ல ஒரு அறிகுறி என்பதும் அவர்களுக்குத் டெஸ்ட் செய்யும் போது தெரிந்துகொண்டதுதான். இங்கு பதியும்போது தவறு நடந்து இட்டது. நீங்கள் சுட்டிக் காடியதும்தான் நான் அதைப் படித்துப் பார்த்தேன். நன்றி! நன்றி!

  பதிலளிநீக்கு
 3. மருத்துவர் பார்வையில் தீவிர நோயாளரை இறுதி வரைக்கும் கண்காணிப்பதே வழக்கம், தீவிர பிரிவில் உள்ளவருக்கு கொடுக்கப்படும் மருந்துகள் அவர்கள் உடலை தொற்று நோய் தாக்குக்கு உட்படுத்தும் என்பதால் அனைவரையும் அனுமதிப்பதில்லை, ஆனால் உண்மை நிலவரத்தை உற்றார் உரியவரிடம் கூறுவதே முறை மற்றும் மேற்கொண்டு என்ன செய்யலாம் என்பதையும் விரிவாக விவாதிக்க வேண்டும். சந்தேகம் உண்டானால் ஒருவரை உள்ளே அனுமதித்து காண்பிக்கவும் வேண்டும். நாமும் கொஞ்சம் விவரமாய் இருக்க வேண்டும்.. !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் முதல் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி! நண்பரே!. நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே!. நோயாளியின் பையனும் கணவனும் நல்ல விவரம் உள்ளவர்கள் தான்!! ஆனால், இங்கு வாழும் சுற்றத்தாரால் அவர் ஒரு முடிவு எடுக்க முடியாமல் dilemma. எனக்கு அந்தக் கஷ்டங்களைக் கேட்டு, பார்த்த போது தோன்றிய சிந்தனைகள் தான் இந்தப் பதிவு. மிக்க நன்றி!

   நீக்கு
 4. இதுலே..தவறே இல்லை; படித்த நாங்களே தடுமாறுகிறோம்!
  என் அறிவு கைமண் அளவு! நான் கல்லாதது உலகளவு!

  அடுத்த பதிவு: பாலகாட்டுக்கு பக்கத்தில் நந்தி!

  பதிலளிநீக்கு
 5. நன்றி! மருத்துவரே! "என் அறிவு கைமண் அளவு" ?? !!!உங்கள் எழுத்துக்கள் அப்படிச் சொல்லவில்லை!! இது உங்கள் தன்னடக்கதைக் காட்டுகிறது!! உங்கள் அடுத்த பதிவு ஏதோ.....smelling......பொடி?!!! ம்ம்ம்ம். உங்கள் பதிவுகள் எல்லாவற்றிற்கும் நாங்கள் இருவரும் பரம ரசிகர்கள்! So, காத்திருக்கிறோம்.!!!

  பதிலளிநீக்கு
 6. ஒரு குறிபிட்ட வயதிற்கு மேல் காப்பாற்ற முடியாத சூழல் வந்தால் அவர்களை மருத்துவம் என்கிற பெயரில் தனிஅறையில் அடைத்து குத்தி குத்தி இம்சிப்பதைவிட வீட்டில் வைத்து உறவுகள் சூழ இருந்து பார்த்துக்கொள்ளலாம். ஆனாலும் இந்த மக்கள் நாக்கு இருக்கிறதே அப்பப்பா..

  பதிலளிநீக்கு