செவ்வாய், 26 நவம்பர், 2013

வேண்டும் விழிப்புணர்வு - அரட்டை அகம் 3

நேற்று இந்தப் பதிவை upload  செய்யிம் போது சரியாக ஏறவில்லை. வாசகர்களுக்கு ஏற்பட்ட குழப்பத்திற்காக வருந்துகிறோம்.   இப்போது அதை சரி செய்தாகி விட்டது.  இனி இது போன்ற தவறு நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம்.

வேண்டும் விழிப்புணர்வு

ஹலோ, கீதா என்ன சூடான நியூஸ் இன்னிக்கு?

என்ன துளசி?  குரல் என்னவோ மாதிரி இருக்கு?  க்ளாஸ்ல கத்தினியா!!!? உன்ன டெய்லி gargle பண்ணுனு சொல்லிட்டே இருக்கேன்ல...கேட்டாத்தானே?  ஒழுங்கா இன்னிக்கு பண்ணு.  என்ன? ம்ம்ம்ம்

O.K. O.K. எல்லாம் செய்யறேன்...நியூஸ் என்னனு சொல்லு..


கொஞ்சம் பழைய நியூஸ் தான். ஞாயித்துக் கிழமை நடந்தது. அறுவை சிகிச்சையை மாத்தி செஞ்சதுனால ஒரு நோயாளி இறந்துட்டாருனு சொல்லி அவரு சொந்தக்காரங்க எல்லாம் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைல ஆர்பாட்டம் பண்ணிருக்காங்க.

என்னது?  சர்ஜரிய மாத்தி பண்ணிட்டாங்களா.....ஹேய் என்ன சொல்ற நீ?

ஆமாம். அதான் நியூஸ். இறந்தவர், சென்னைல எழும்பூர், டாக்டர் சந்தோஷ் நகரைச் சேர்ந்தவராம். பேரு ஏழுமலை.  47 வயசு. அவரு திடீர்னு மயங்கி விழுந்துருக்காரு. காப்பீட்டுத்திட்டத்தின் மூலமா ரூ.50,000 மதிப்புள்ள ஒரு ஊசி போட்டுருக்காங்க.  அதுக்கு அப்புறம் CT scan எடுத்துருக்காங்க. மூளைல ரத்தம் உறைஞ்சுருக்குனு தெரிஞ்சுருக்கு.  அதுக்கு அப்புறம் எடுத்த    CT scan ல மூளைப் பகுதி வீங்கி இருந்ததைக்  கண்டு பிடிச்சுருக்காங்க.  உடனே சர்ஜரி. திரும்பவும் scan. அப்போ கொஞ்சம் உடல் நிலைல முன்னேறம் இருக்கறதா சொல்லிருக்காங்க. ஆனா ஞாயிறு மதியம் அந்த ஆளு இறந்துட்டாராம். அவருக்கு எடுத்த அந்த ஸ்கானப் பார்த்த அவரு சொந்தக்காரங்களுக்கு அதுல 3 வதா எடுத்திருந்த ஸ்கான்ல ‘ஏழுமலை வயசு 17னு இருந்துச்சாம்.  ஸோ, 17 வயசுப் பையனுக்குச் செய்ய வேண்டிய சர்ஜரிய இவருக்குச் செஞ்சுட்டாங்கனும் அதனாலதான் அவரு இறந்துட்டாருன்னும் போராடியிருக்காங்க.  அந்த உடலை நேத்து பிரேத பரிசோசனை செஞ்சுருப்பாங்க.  அதை வீடியோவுல பதிவும் செய்யப் போறதா சொன்னாங்களாம்.  சொந்தக்காரங்க தரப்புல என்ன சொல்றாங்கனா, அந்த ந்ரம்பியல் கட்டிடத்துல ஏற்கனவே 47 வயசுல ஏழுமலைனு ஒருத்தரும், 17 வயசுல ஏழுமலைனு ஒரு பையனும், 3 வதா இந்த இறந்தவரும் இருந்தாங்களாம். அதான் இந்தக் குழப்பம்னு சொல்றாங்க.  ஆதாரம் ஸ்கான் அப்படினு சொல்றாங்க. டாக்டர் தரப்புல என்ன சொல்றாங்கனா, இவரைத் தவிர வேற யாரும் ஏழுமலைன்ற பேருல சேரல, இவர் மட்டும்தான் அப்படினும்...ஸ்கானில வயச டைப் செய்யும் போது தவறுதாலா 47க்குப் பதிலா 17னு டைப் செய்யப்பட்டு இருக்கலாம், மத்தபடி ஸ்கான் மாற வாய்ப்பில்லைனும், சர்ஜரியும் மாத்தி செய்யலனும் சொல்றாங்க. 

எது உண்மைனு தெரியாட்டாலும், இதுலருந்து என்ன தெரியுதுனா நாம கொஞ்சம் விழிப்புணர்வோட இருக்கணும்னு.  நாம எப்ப இந்த மாதிரி டெஸ்ட் எடுத்துக்கிட்டாலும் ரிப்போர்ட் வாங்கும் போது அது நம்முடைய ரிபோர்ட்தானா என்றும், எல்லா details உம் சரியாக உள்ளதானும் செக் செய்யறது நல்லது.

இதுல முக்கியமான ஒரு விஷயம், ஒரு ஆஸ்பத்திரில டாக்டர்ஸ் மட்டுமில்லாம அங்க வேலை செய்யற எல்லாருமே மெயினா லாப் டெனிஷியன்ஸ் ரொம்ப பொறுப்பா இருந்தாதான் இந்த மாதிரியான தப்பெல்லாம் நடக்காம இருக்கும்.  டாக்டர்ஸ் அந்த அளவுக்கு மோசமா இருப்பாங்களா என்ன? எனக்கென்னமோ அப்படித் தெரில.....ம்ம்ம்ம்

சரி, இது படிப்பறிவு, விவரம் உள்ளவங்களுக்கு ஓகே.  படிக்கத் தெரியாதவங்க, விவரம் இல்லாதவங்க என்ன செய்வாங்க?

ம்ம்ம்ம்..ஆமாம் நீ சொல்றதும் கரெக்டுதான்...நம்ம நாட்டுக்கு இது கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான்....ஸோ டாக்டர் கையிலதான் இருக்குனு சொல்லு......சரி அப்ப அன்பேசிவம்ல நாஸர் சொல்றா மாதிரி...தென்நாடு சிவனே போற்றி எல்லாம் அவன் செயல்!!!!???  சரி வேற என்ன நியூஸ்?

அதை ஏன் கேக்கற நாம, தமிழ்நாட்டின் (நெடுஞ்)சாலைகள் படுகொலைச் சாலைகளா? என்ற இடுகையை நம்ம வலைப்பூவுல இட்டு 24 மணி நேரம் கூட ஆகவில்லை அதற்குள்ள ஞாயிறு செய்தித்தாள்ல வெளியான அந்தச் செய்தியைப் பார்த்ததும் அரண்டுட்டேன்!  “சினிமா பாணியில் சேசிங்க்: நடுரோட்டில் கவிழ்ந்த ஆட்டோ: அதிர்ஷ்டவசமக உயிர்தப்பிய பொதுமக்கள். அப்படின்னு!

ஹேய்! நானும் அதப் படிச்சேன். அதப் பத்திதான் இப்ப உங்கிட்ட பேசணும்னு நினைச்சிருந்தேன் அதுக்குள்ள நீயே சொல்லிட்ட அப்ப நாம அதுக்கு முந்தின நாள் இந்தத் தலைப்பை பத்தி discuss பண்ணி எழுத ரெடி பண்ணிகிட்டு இருந்த நேரம்னு சொல்லு.....

ஆமாம். ஞாயிற்றுக் கிழமைச் சென்னையில மதியம் 2 மணி அளவில வேப்பேரி ஈ.வி.கே சம்பத் ரோடு, பூந்தமல்லி ஹை ரோடு சிக்னல்ல, ஒரு லோடு ஆட்டோவை ஒரு டாட்டா இன்னோவா கார், சினிமா பாணியில, சினிமாவையே மிஞ்சும் அளவுக்கு துரத்தியிருக்கு. அதுக்கு முன்ன புரசைவாக்கத்தில, இந்த லோடு ஆட்டோ அந்த இன்னோவாவை உரசினதுல ஏற்பட்ட தகராறுதான் சண்டையா மாறி, சேசிங்கில முடிஞ்சிருக்கு பாத்துக்க!. சேசிங்கில அந்த ஆட்டோ பூந்தமல்லி நெடுஞ்சாலையில திரும்பும் சமயம் தலைகீழாக் கவிழ்ந்துருக்கு. அந்த இன்னோவா காராரு ஆட்டோவை விரட்டுற வேகத்துல, இத்தன பேரு ரோட்டுல வண்டி ஓட்டறாங்களேனு எல்லாம் யோசிக்காம மறந்துட்டு துரத்திருக்காரு பாரு. My God!  நல்ல காலம் பொது மக்கள் யாரும் விபத்துல சிக்கல. உயிர் பொழச்சாங்க.  ஆட்டோ ஓட்டுநர், தான் குடிச்சுருந்ததா ஒப்புக் கொண்டிருந்திருக்காரு. ரெண்டு தரப்பும் போலீசார் முன்னாடியே சண்டைபோட்டுருக்காங்க. இதில அந்த இன்னோவா காருக்குப் பக்கத்துல வந்த மற்றோரு காரோட்டி என்னை மோதிக் கொன்றிருப்பாயே, நல்ல வேளை உயிர்பிழைத்தேன் அப்படின்னு திட்டிவிட்டு போயிருக்காரு. ஆட்டோ டிரைவர் கை எடுத்துக் கும்பிட்டு அழுதிருக்காரு என் குடும்பமே பாதிக்கப்படும், குழந்தைங்க எல்லாமே பாதிக்கப்படும் அப்படினு. அத குடிச்சுட்டு வண்டி ஓட்டறதுக்கு முன்னமேயே யோசிக்க வேண்டாமா?  போலீசு அந்த ஆட்டோ டிரைவரைக் கொண்டு போயிட்டங்களாம்.  ஆனா ரெண்டு தரப்பினர் மேலயும் வழக்கு போடலயாம். இது எப்படி இருக்கு?

அப்ப நம்ம நம்பள்கி திருந்துவாங்களா ன்னு சொன்னது சரிதான்னு சொல்லு

ஆமாம். இது போல தினமுமே  வாகன ஓட்டிகளிடையே நடக்கத்தான் செய்யுதாம்.  ஞாயிறு அன்னிக்கு எல்லை மீறிடுச்சாம்.  இது எப்படி இருக்கு?! இது மாதிரி சம்பவங்களில யாரேனும் ஒருத்தர் பொறுமையைக் கடைப்பிடிச்சிருந்தா பிரச்சினை முற்றியிருந்திருக்காது. வாகன ஓட்டிகளுக்கு நிதானமும், பொறுமையும் தேவை என்பதுதான் இதிலிருக்கும் பாடம்.  கற்றுத் திருந்துவார்களா நம் மக்கள்? மக்கள் சற்று விழிப்புணர்வோடு இருந்தாதான் அவங்கவங்க உயிரக் காப்பாத்திக்க முடியும்.  



நீ இத சொல்லும் போது இன்னிக்கு, இங்க நம்ம ஏரியாவுல ஒரு பொண்ணு வண்டி ஓட்டிட்டு போயிட்டுருக்கும் போது ஒரு லாரி ஓவர் டேக் செஞ்சுருக்கு.   அந்தப் பொண்ணு “ட்துப்பட்டாவ இழுத்துக் கட்டியோ, பின் பண்ணியோ வைச்சுக்காம இருந்துருக்கா.  ஸோ, லாரியொட பின் பக்க ஹூக்ல அந்தப் பொண்ணோட “ட்துப்பட்டா”  மாட்டி இழுத்து, பொண்ணு விழுந்து on the spot out.

ஐயோ! ஏன் அந்தப் பொண்ணு அப்படி பண்ணிச்சு.? வண்டி ஓட்டும் போதும் சரி, வண்டி பின்னாடி உக்காந்து போகும் போதும் சரி, ட்துப்பட்டாவானாலும், சேலைத் தலப்பானாலும் நல்லா இழுத்து கட்டிக்கிட்டுதான் போகணும்.  இல்லனா டேஞ்சர்தான்....

ஏதோ! நம்ம மக்கள் விழிப்புணர்வோடு இருந்து நல்லது நடந்தா சரி! ம்ம்ம்ம்......சரி...BSNL லைன கட் பண்ணறதுக்குள்ள நாம முடிச்சுக்குவோம்.  ஏதாவது நல்ல டாப்பிக் அடுத்த பதிவுக்கு ரெடி பண்ணு.  ஆனா வேற டாப்பிக்கா இருக்கட்டும்.  அப்புறம் அதப் பத்திப் பேசி எடிட் பண்ணலாம். இப்ப, பை! பை!!


  

10 கருத்துகள்:

  1. நல்லதொரு விழிப்புணர்வு தகவல்கள்... பதிவை தமிழ்மணத்தில் இணைக்கவும்... (மின்சாரம் போகா விட்டால் நான் இணைத்திருப்பேன்...)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்திற்கு நன்றி நண்பரே! ஆனால் அதைப்பதிவு செய்து ஏற்றம் செய்யும் போது இன்டெர்னெட் பிரச்சினை வந்ததால் சரியாக upload ஆகாமல் போய்விட்டது. அதை சரிசெய்த்து மீண்டும் ஏற்றியிருக்கிறோம். குழப்பத்திற்கு வருந்துகிறோம்! இனி இது போன்று நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம். அந்தக் குழப்பத்தையும் வாசித்த உங்கள் பொறுமைக்கு நன்றி.!! தமிழ்மணத்தில் இணக்க முடியவில்லை. அதில் .in என்று பதிவானது இப்போது .com ஆனதால் என்று நினைக்கிறேன். சரி செய்கிறேன்.

      நீக்கு
    2. வலைத்தளம் .in லிருந்து .com ஆக மாற்ற உதவி, அதன் பின் இதனை தமிழ்மணத்தில் இணக்கவும், ஓட்டுப்பட்டையை இணைக்கவும் இந்தப் பதிவில் ஏற்பட்ட குழப்பங்களைச் சரி செய்ய உதவி, ஓட்டும் அளித்த திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களை என்னவென்று சொல்வது?!!!! எப்படி அவருக்கு நன்றி உரைப்பது என்று தெரியாமல் திணருகிறோம் நாங்கள். நன்றி! நன்றி! நண்பரே!! ஓட்டுப்பட்டையை இணைக்க வேண்டிய திரு பகவான்ஜிக்கும் எங்கள் நன்றி! நன்றி! இப்படிப்பட்ட நல்ல நண்பர்கள் கிடைத்ததற்கு நாங்கள் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்!!!

      நீக்கு
  2. வணக்கம்
    பதிவில் அருமையான விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளிர்கள் தொடர்ந்து.... எழுதுங்கள்...பதிவு அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்துக்கும், கருத்திற்கும் நன்றி.! மறுமொழி கொடுத்து எங்களை ஊக்குவிப்பதற்கும் நன்றி! சந்தோஷம்! வலைப் பக்கம் காணவில்லையே? உங்கள் எழுத்துக்களையும் எதிர்பார்க்கிறோம்!

      நீக்கு
    2. ரெம்ப யூஸ்புல்லான மேட்டருபா... அல்லாரும் ரெம்ப முயிப்பா இர்ந்துக்கணும்பா...

      //வலைத்தளம் .in லிருந்து .com ஆக மாற்ற உதவி, அதன் பின் இதனை தமிழ்மணத்தில் இணக்கவும், ஓட்டுப்பட்டையை இணைக்கவும் இந்தப் பதிவில் ஏற்பட்ட குழப்பங்களைச் சரி செய்ய உதவி, ஓட்டும் அளித்த திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களை என்னவென்று சொல்வது?!!!!//

      இக்கும்பா... அவுரு எப்பயும் இப்புடித்தாம்பா... அல்லாருக்கும் எல்ப் பண்றதே ஒரு பொயப்ப வச்சிகினுகீறார்பா... என்க்கும் அவரு காண்டி தான் எல்ப் பண்ணிக்கினார்பா... நீ ஒன்னும் மெர்சலாவாதபா... அவரு காண்டி "நன்றி! நன்றி! நண்பரே!!" அப்புடிக்கா திட்டிக்கினு போய்க்கினே இர்க்கவேண்டியதுதான்பா...

      நீக்கு
    3. ரொம்ப நன்றி நைனா! உங்கள் கருத்திற்கு! ஆமாம் நைனா இந்த DD இருக்காரே நீங்க சொல்றா மாதிரிதான்பா....//அவரு காண்டி "நன்றி! நன்றி! நண்பரே!!" அப்புடிக்கா திட்டிக்கினு போய்க்கினே இர்க்கவேண்டியதுதான்பா...// சரியா சொல்லிகினபா....நன்றிபா

      நீக்கு
  3. ஏழு மலைக்கு இந்த முடிவா ?
    அந்த ஏழு மலையான் தான் காப்பாற்றனும் !
    நன்றிக்கு என் மறுநன்றி !
    +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி பகவான் ஜி! உங்கள் கருத்திற்கு!! உங்கள் கை காட்டல்தான் இன்ரு எங்கள் வலைப்பூ ஓட்டுப்பட்டையுடன் வலம் வருகின்றது!! நன்றி நன்றி!!

      நீக்கு
  4. தாங்கள் சொல்வது உண்மை தாங்க. மருத்துவமனைகளில் இது போன்ற தவறுகள் நடந்தாலும்அது படிக்கத்தெரிந்த மக்களுக்கு தெரியவந்தால் சரி. படிக்காம மக்கள் என்ன செய்வார்கள்?
    போக்குவரத்தின் போது ஒவ்வொருவரும் தமது உயிரின் மேல் அக்கறை காட்டினாலே விபத்துகள் குறைய வாய்ப்புள்ளது.

    பதிலளிநீக்கு