வெள்ளி, 1 நவம்பர், 2013

தீபாவளி  இலவசம் .....


தீபாவளிக்கு இது இலவசம்,  அது இலவசம்னு அள்ளி விடுறாங்க....ஆனா, ஒரு ஷர்ட்  வாங்கினா ஒரு டஜன் குண்டூசி இலவசம்னு ஏன் சொல்ல மாட்டேன்றாங்க (என்ன செந்தில் கவுண்டமணிக்கிட்ட கேக்கறா மாதிரி தோணுதோ!!!)

இலவச யோசனைகள்....

இரண்டு சாரி வாங்கினால், இல்ல  ரூ 1000 க்கு வாங்கினால், ஒரு கிலோ சாம்பார் வெங்காயம் இலவசம்னு  போடலாம்.  நல்ல கூட்டம் அலை மோதும்.ரூ 2000 க்கு வாங்கினால் சாம்பார் வெங்காயம் + ஒரு கிலோ பெரிய வெங்காயம் இலவசம்னு சொல்லலாம்.

ரூ 3000 க்கு மேல் வாங்கினால் 2 வெரைட்டீ வெங்காயமும் + ஒரு கிலோ தக்காளி இலவசம்
ரூ 5000 க்கு மேல் வாங்கினால்  தீபாவளி அன்று 4 பேருக்கு சமைப்பதற்கு தேவையான காய்கறிகள் இலவசம்னு சொல்லலாம் 

இது எப்புடி ???!!!!!! எல்லாம் விக்கற விலைல என்னத்த சொல்லறது...... நம்ம மக்கள் atleast இப்படியாவது சந்தோஷப்படட்டுமே!!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக