சனி, 26 அக்டோபர், 2013

ஆறறிவு?? படைத்த நாம் திருந்தப் போவது எப்போது??

ஆறறிவு?? படைத்த நாம் திருந்தப் போவது எப்போது??


உடலுக்குக் கேடு ஏற்படுத்தும் மெல்லும் புகையிலைப் பொருட்களின் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா டப்பாக்கள் கொடுங்கையூர், பெருங்குடி கிடங்குகளில் மண்ணில் புதைத்து அழிகப்பட்டன..அடக்கம் செய்யும்........ – செய்தி

ரொம்ப சந்தோஷமான செய்திதாங்க.  எப்பங்க ‘குடி திரவங்களுக்கு சமாதி கட்டப்போறாங்க? அந்த இனிய நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் இந்தியக் குடிமகன்......ஐய்யோ தப்பா எடுத்துக்காதீங்க......குடி மகன் இல்லீங்க.......குடிமகன்தாங்க.....ஏன்னா இந்தக் கேடுகெட்ட குடியினால எத்தனையோ குடும்பங்கள் சீரழியுதுங்க...குற்றங்கள் நடக்குதுங்க....அப்புறம் இந்தக் காதல் தோல்வினு நிறையபேரு தேவதாஸ் தாடியோட கையில பாட்டிலோட அலையறாங்க...இதுக்கெல்லாம் ஒரு முடிவு வராதானு ஒரு ஏக்கம் தாங்க.....சமாதி கட்டினதுக்கப்புறம் அது ‘ஆவியா வந்திடாம இருக்கணுங்க....

-------------------------------------------------------------------------
பசுமை வழியில் வாழ வேண்டும்- ஆளுநர் ரோசய்யா அறிவுரை

பசுமைக் கட்டிடசர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி 2013-ல் அவர் பேசியது........சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் தமிழகம் முன்னிலையில் உள்ளது.(?).....நாம் அனைவரும் இயற்கையுடன் இணைந்து பசுமை வழியில் வாழக் கற்றுக் கொள்வதன் மூலம் நம்மால் நம் சுற்றுச் சூழலைப் பாதுகாக்க முடியும்

கேக்க நல்லாத்தான் இருக்குது.......ஆனா, இயற்கையுடன் அப்படினா என்னாது? எங்க இயற்கை இருக்குது?  தமிழ்நாட்டுல உள்ள ஒவ்வொரு நகரத்துலயும், மாநகரத்துலயும், எத்தன காருங்க, ரெண்டு சக்கர வண்டிங்க ஓடுது புகய கக்கிக்கிட்டு.....கொஞ்சம் உங்க வீட்டு மொட்டை மாடில ஏறி பாருங்க சுத்தி.....பச்சையா ஏதாவது தெரியுதா? ஒரே கட்டடக் காடுதானே தெரியுது....இருக்கற ஒண்ணு ரெண்டு பச்சையையும் அழிச்சுட்டு எப்படா ப்ளாட்டு போட்டு கட்டடமா மாத்தலாம்னு நிறைய கூட்டமே அலையுது......

காணி நிலம் வேண்டும்-பராசக்தி
காணி நிலம் வேண்டும்;-அங்கு,
தூணில் அழகியதாய்-நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய்-அந்தக்
காணி நிலத்திடையே-ஓர் மாளிகை
கட்டித் தரவேணும்;-அங்கு,
கேணி யருகினிலே-தென்னைமரம்
கீற்று மிளநீரும்
பத்துப் பன்னிரண்டு-தென்னைமரம்
பக்கத்திலே வேணும்;-நல்ல
முத்துச் சுடர்போலே-நிலாவொளி
முன்புவர வேணும்?அங்கு
கத்துங் குயிலோசை-சற்றே வந்து
காதிற்பட வேணும்;-என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே-நன்றாயிளந்
தென்றல்வர வேணும்.

இப்படி பைத்தியக்காரக் கவிஞன் பாரதினு ஒருத்தன் பாடிட்டு போயிட்டான்.  அவன ரசிச்சு, அவன மாதிரியே கனவு கண்டு நானும் ஒரு காணி நிலம் வேணும்னு நாயா பேயா அலயறேன். ம்ம்ம்ம் எங்க?.....ஏழுதலை முறை விலை வேற...பெருமூச்சுதான் தென்றல்....தென்னை மரம்?  ஹாங்......இப்போதைக்குத் தென்னை மரம்னா என்ன அப்படினு   அடுத்த சந்ததயினர்க்குச் சொல்றதுக்கு    இருக்கு  ஆனா    எதிர்காலத்துல.????..... கேணி?  அப்படின்னா?  பூதம் வராம இருந்தா சரி.....மாளிகை?  ஒரு குச்சு வீடு கிடைச்சாலே பெரிய விஷயம்....குயில்?  கூகிள் ல குயில்னு போட்டுத் தேடுங்க...படம் வரும் அதுதான் குயில்.....நிலா....ஹா இப்போதைக்கு அது ஒண்ணுதான்...அதுல கூட நம்ம மக்கள் ப்ளாட் போட்டு கட்டிடம் கட்டி அந்த ஒளியை மறைக்காம இருந்தா சரி......

ம்ம்ம் இதுல பசுமையோடு இணைந்து பசுமை வழியில் வாழக் கற்றுக் கொள்தல் என்பது ஏட்டளவிலும், உதட்டளவிலும்தான் போய்க் கொண்டிருக்கிறது.  இன்னும் இன்னும்  நாம் பொருள் சார்ந்த உலகை நோக்கித்தான் பயணிக்கிறோம்.  ஆக்சிஜன் ஸ்வாசித்தல் மையங்கள் கூட உருவாகிவிட்டதாகவும் செய்தி. தன் குழியைத் தானே பறித்துக் கொள்ளும் அவல நிலை.  நாம் திருந்தப் போவது இல்லை.

1 கருத்து:

  1. மாறும் என்று நம்புவோம் எத்தனை நாளைக்குத்தான் ஓடிக்கொண்டே இருப்பார்கள் ஒரு நாள் உண்ண உணவு இல்லாமல் நிற்கும் நிலை வந்தால் அவரவர் தேவைக்கு எனவாவது பயிரிடத்துவங்குவார்கள். சமீபத்தில் பேஸ்புக்கில் படித்தேன் இன்ஜினியர் மாணவர்கள் விவசாயம் செய்வதாக இப்படி மாற்றம் வரும் என்று நம்புவோம்.

    பதிலளிநீக்கு