சனி, 10 ஆகஸ்ட், 2013

மிஸ்டர் பிள்ளை, ஐ ஆம் ஸாரி, ஐ கான்ட் ஹெல்ப் யு

மிஸ்டர் பிள்ளை, ஆம் ஸாரி, கான்ட் ஹெல்ப் யுமிஸ்டர். சிதம்பர நாதன் பிள்ளை, ஐ அம் ஸாரிஎன்னால ஹெல்ப் பண்ண முடியாதுஇனிமே, உங்களுக்கு ஹெல்ப் பண்ண மாட்டேன். 
இப்ப, கோழிக்கோட்ல நடந்த குழந்தைகளுக்கானத் திரைப்பட விழாவில எனக்கு என்ன நடந்ததுனு தெரியுமா உங்களுக்குஎனக்கு எத்தனை வயசுனு தெரியுமா
ஐம்பது வயசு.  இந்த வயசுல உங்களுக்காக இந்த அழுகின முட்டைகளையும், அழுகின தக்காளிகளையும் அவங்க என் மேல எறிஞ்சதை பொறுத்துகிடணுமா? மனசுக்கு ரொம்ப வருத்தமா இருக்குதுங்க.  இது கேரளா, தமிழ்நாடு இல்லைனு உங்களுக்கு எத்தனைத் தடவை நான் சொல்லியிருக்கேன்இங்குள்ள மக்கள், பாலியல் பலாத்காரம், ஊழல் மாதிரி பிரச்சினைகள்லதான் அதிகமா ஆர்வம் காட்டுவாங்கநான் சரியான சமயத்தில உங்களுக்கு அட்வைஸ் பண்ணினேன்.  ஆனா, நீங்க அதை கொஞ்சம் கூட காது கொடுத்துக் கேக்கல.  உங்களை அவங்க எதுவுமே செய்யலல., நான் தானே எறி பட்டேன்? என்னோட கன்னத்திலும், நெத்தியிலயும்தானே அழுகிப்போன முட்டைகளையும், தக்காளிகளையும் எறிஞ்சாங்க.  எறியும்போது என்ன சொல்லி எறிஞ்சாங்க தெரியுமா?”

என்ன தைரியம் இருந்திருந்தா இந்த மாதிரி தரக்குறைவான ஒரு நாடகத்தை எங்க திரைப்பட விழாவுக்குக் கொண்டு வந்திருப்ப.? நீ என்ன பெரிய்ய்ய ஆளுனு நினப்பா?  இங்க இருக்கறவங்களப் பத்தி தெரியுமா உனக்கு? இவங்கள பத்தி என்ன நினச்சுருக்க நீ? இவங்கலாம் படத்த ஆர்வமா, ரசிச்சுப் பார்க்கறவங்க மட்டும் இல்லநல்ல டைரக்டர்ஸும் கூடஇந்த மாதிரி ஒரு இடத்துக்கு இந்த மாதிரி ஒரு பீரியட் நாடகத்தக் கொண்டுவந்துருக்க,? அதிலயும் நடிப்பே தெரியாதவங்க, நடிப்புக்கும் அவனுங்களுக்கும் சம்பந்தமே இல்லாதவனுங்க எல்லாம் நடிக்க வெச்சுக் கொண்டுவந்துருக்கஅதுக்கு உனக்கு கொடுக்க கூடிய மரியாத இதுதான். இந்தா  வாங்கிக்க

 யோசிக்காமல், என் மனைவியையும், குழந்தைகளையும், பக்கத்து வீட்டுக்காரர்களையும் இந்த விழாவிற்குக் கூட்டிக் கொண்டு வந்துவிட்டேன். கொஞ்ச நேரத்திலேயே பார்வையாளர்கள் எல்லோரும் அமைதி இழந்து கத்த ஆரம்பித்துவிட்டார்கள். ‘இந்தப் படத்த நிறுத்தி. வேற படத்த போடுயாஎன்று கத்தினார்கள்அதனால் என்னால் உள்ளே உட்காரக் கூட முடியவில்லைநான் எழுந்து எனக்கு ஏதொ அவசர ஃபோன் கால் வந்தது போல பாவ்லா செய்து வெளியில் வந்தேன்எனது மனைவியும், குழந்தகளும் பார்வையாளர்களின் கத்தலில் வெறுப்பாகி அவர்களையே கவனித்துக் கொண்டு இருந்ததால் அவர்கள் என் முகத்தில் உள்ள அழுகிய முட்டைகளையும், தக்காளிகளையும் கவனிக்கவில்லைஎப்படியோ, போலீசாரும், சேவகர்களூம் வந்து என்னைக் காப்பாற்றி கழிவறைக்கு அழைத்துச் சென்றனர்அங்கு என் முகத்தை கழுவிக் கொண்டேன்திரும்பவும் படம் திரையிடும் ஹாலை நோக்கி நடக்க முயன்றேன்உடன், போலீசும், சேவகர்களும் என்னை எச்சரித்தனர்.

சார், நீங்க அங்க போறது அவ்வளவு நல்லதில்லதிரும்பவும் அவங்க உங்கள ரொம்ப மோசமா தாக்கினாலும்  தாக்கலாம்ஆச்சரியப்படறதுக்கு இல்லஅதனால, நீங்க இப்ப என்ன பண்றீங்க, நாங்க டாக்சி ஏற்பாடு பண்ணித் தரோம்அதுல ஏறி, ரெயில்வேஸ்டேஷன் போயி வெயிட் பண்ணுங்கஉங்க ஃபாமிலி அங்க வந்து சேர ஏற்பாடு பண்ணறோம்நீங்க இப்ப கிளம்புங்க. சொன்னா கேளுங்க.  உங்க நன்மைக்குதான் சொல்றோம்”

அப்போது அவர்கள் சொல்வதைக் கேட்பதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லைஇவர்கள் சொல்வது போல, மீண்டும் என்னை அங்கு அந்தக் கூட்டம் பார்த்தால் திரும்பவும் தாக்கக் கூடும்எனவே, இந்தத் தருணத்தை சமயோசிதமாக உபயோகித்துக் கொண்டேன்என் குடும்பமும் சற்று நேரத்தில் ரெயில்வேஸ்டேஷன் வந்து சேர்ந்து என்னைச் சூழ்ந்து கொண்டார்கள்அவர்கள் என்னை சந்தேகக் கண்களோடு பார்ப்பது தெரிந்தது

என்னாச்சு உங்களுக்குஏன் இங்க வந்து நிக்கறீங்க, விழால கலந்துக்காம? எங்களயும் இங்க கொண்டுவந்து விட்டுட்டாங்க! ஏதாவது பிரச்சினையா? உங்க முகத்துல ஏதோ வெள்ளையா முட்டை மாதிரியும், சிவப்பா ஏதோ தக்காளி மாதிரியும் பார்த்தோம்ஏதோ நடந்துருக்குதுஎன்னங்க அது?’”

இப்படி நிறைய கேள்விக் கணைகள் என் குடும்பத்தாரிடமிருந்து வந்தனஆனால் நான் அதை சாமர்த்தியமாக சமாளித்தேன்இல்லை என்னவோ சொல்லி சாமர்த்தியமாக சமாளித்ததாக நினைத்துக் கொண்டேன்.

! அதுவா! ஏதொ டெலிவிஷன் சானலில் இருந்து இந்த பட விழா பற்றி என்னைப் பேட்டி எடுக்கப் போறதாகச் சொன்னாங்கஅதுக்கு என் முகம் கொஞ்சம் பிரகாசமா இருக்கணும்ல அதுக்காக ஃபேஸ்மாஸ்க் மஸாஜ் பண்ணிக்கிட்டேன்அவ்வளவுதான்

! அப்படியாஉங்க டயலாக்க நம்பித்தானே ஆகணும்! நாங்க பயந்தே போயிட்டோம் யாராவது பொறாமை பிடிச்சவங்க அழுகின முட்ட, தக்காளிய உங்க மேல எறிஞ்சிருப்பாங்களோனு நினச்சோம்” என்று என் மனைவி என்னை நமுட்டு சிரிப்புடன் நக்கலடித்தாள்.

பார்வையாளர்கள் இந்தப் படத்தைத் தப்பா எடுத்துக்கிட்டாங்க.  அதாவது, இந்தப் படம் கேரளால இருக்கற இந்துக்களுடைய நம்பிக்கைக்கு எதிரா எடுத்திருக்கறதாக நினைச்சுட்டாங்ககேரளால இருக்கற எல்லா இந்துக்களும் விஷ்ணுவ வணங்குறவங்க. 18ஆம் நூற்றாண்டில திருவிதாங்கூரை ஆண்ட மார்த்தாண்ட வர்மா வைணவத்தை தான் ஏற்றதோடு தன் மக்களையும் வைணவர்களாக மாற்றி விட்டாராம்.  ஓம்ங்கறதையே மாற்றி ஹரி நாமத்தை ஏத்துகிட்டாங்க.  அதனாலதான், அவங்க ஓம் ஸ்ரீ கணபதயே நமனு சொல்றதுக்கு பதிலா ஹரி ஸ்ரீ கணபதயே நமனு சொல்றாங்க.  இங்க, கேரளாவுல சிவ வழிபாடு செய்யற சைவ சமயப் பிரிவு இல்லைஅதனால, அவங்களால, விஷ்ணு பக்தர்களுக்கும், சிவ பக்தர்களுக்கும் நடுல ஏற்படுற  சச்சரவுகளை ஏத்துக்க முடிலஅதுதான் காரணம்என்ற வகையில் சொல்லி ஓரளவு அவர்களை நம்பச் செய்தேன்.

எப்படி இருப்பினும், நாடகத்தில் காண்பிக்கப்பட்ட சச்சரவுக் காட்சிகள், பார்வையாளர்களின் மத்தியில் எந்தக் குழப்பத்தையும் ஏற்படுத்தவில்ல என்றும், அந்த நாடகம்தான் குழப்பமே என்பதும் எனக்கு நன்றாகத் தெரியும்ஏனென்றால் அவர்களால் அந்த நாடகத்தை முழுமையாகச், சரியான கோணத்தில் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதுதான் அங்கு நடந்ததை வைத்து நான் புரிந்து கொண்டதுஒருவேளை அது மலையாளத்தில் எழுதப்பட்டிருந்தால், அவர்கள் அதைப் புரிந்து கொள்ள முயற்சியாவது செய்திருப்பார்கள்ஆனால் அது ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்ததுஅதுவும் இருபதாம் நூற்றாண்டு ஆங்கிலம்தற்போதைய ஆங்கிலத்தில் உலா வரும் நவீனச் சொற்களாகிய, “shit, wanna, gonna, hell, yaar, aint, and o.k.”. போன்றவை இல்லை.

மிஸ்டர் பிள்ளை, உங்களை எத்தன தடவக் கெஞ்சியிருப்பேன்? சொல்லுங்கஒரு நல்ல தமிழ்  தெரிந்த பத்திரிகையாளராப் பார்த்து அவரை உங்க தமிழ் வசனத்த இங்க்லிஷ்ல எழுதித் தரச் சொல்லுங்கனு  சொன்னேனா இல்லையா? நீங்க அந்த மாதிரி செஞ்திருந்தீங்கன்னா, அவரு வெற்றிகரமா, இதுக்குத் தேவையான, காரசாரமா, வசீகரமா, இந்தக் காலத்துக்குப் பொருந்தரா மாதிரியான வசனம் எழுதிக் கொடுத்துருப்பாருல்ல? என்னுடைய எச்சரிக்கய கேக்காம என்னைய எழுதித் தரச் சொல்லி என் மேல பெரிய பாரத்த இறக்கி வைச்சீங்கஎனக்கு இதுக்கு பின்னாடி இருக்கற காரணம் தெரியும்நீங்க உங்க கைல இருந்த நாப்பதாயிரம் ரூபாய்க்குள்ள இந்த குறும்படத்த எடுத்து முடிச்சிடணும்னு முயற்சி செஞ்சீங்கஅதனால, எனக்கு இங்கிலீஷ் நல்லா வருதுனு சொல்லி என்னை இதுல இழுத்து விட்டீங்கஆமா! எனக்கு இங்கிலீஷ் தெரியும்தான்பேசத் தெரியும், எழுதத் தெரியும் தான். ஆனா இங்கிலீஷ் வொக்காபுலரியும், நல்ல ஸென்டென்ஸ் எழுதற திறமையும் கொஞ்சம் கம்மிதான்நான் படிச்சது கவர்ன்மென்ட் எய்டட் ஸ்கூல்ல. ஹைஸ்கூல் க்ளாஸஸ்ல, ஸ்யின்ஸும், ஸோஸியல் ஸ்யின்ஸும் கத்துக் கொடுத்த டீச்சர்ஸ்தான் இங்கிலீஷும் கத்துக் கொடுத்தாங்க. இப்ப உள்ள பிள்ளைங்கல்லாம் அதிர்ஷ்டசாலிங்கஅவங்க இப்ப டெலிவிஷன்ல பார்க்கற மாதிரியான கார்டூன் நெட்வொர்க்கோ, இங்கிலீஷ் படங்களோ என் சின்ன வயசுல டெலிவிஷன்ல பார்த்ததே கிடயாதுஅதனால, உங்களுடைய ரொம்ப நீளமான தமிழ் வசனங்கள இந்தக் காலத்துக்கு ஏத்தா மாதிரி எழுத முடியாம எனக்குத் தெரிஞ்ச இங்கிலீஷ்ல எழுதினேன்ஆனா, எழுதறப்பதான் இந்த நாடகத்த புரிஞ்சுக்கற வாய்ப்பு எனக்குக் கிடச்சுதுஉங்க நாடகம் ரொம்ப அருமையா இருக்குதுஆனா, இதை ரொம்ப ஆழமா படிச்சாத்தான் இதோட அருமைய புரிஞ்சுக்க முடியும்அதுவுமில்லாம, இத ஆழமா புரிஞ்சுக்கணும்னா, இதப் பார்க்கறவங்களுக்கு, ஓரளவுக்காவது கேரள சமூகத்தைப் பத்தின அறிவும், கேரள சரித்திரமும், த்வைத தத்துவத்திற்கும், அத்வைத தத்துவத்திற்கும் உள்ள வித்தியாசமும் தெரிஞ்சிருக்கணும்ஆனா, இந்த நவீன, அதிவேகமா இருக்கற உலகத்துல யாருக்குமே தெரியாத ஒரு மாபெரும் அரசரைப் பத்தி தெரிஞ்சுக்கவோ, புரிஞ்சுக்கவோ, அவங்களுக்கு நேரமும் கிடயாது. எந்த முயற்சியும் எடுக்கவும் மாட்டாங்கமிஸ்டர் பிள்ளை, உங்கள இங்க யாருக்கும் தெரியாதுஇங்க பெரிய எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயர், உன்னியார்ச்சா அப்படின்ற வரலாற்று கதைல நடந்த சில சம்பவங்கள ட்விஸ்ட் செஞ்சதுல அவருக்கு வெற்றியும் கிடச்சுதுஆனா நீங்க மஹாபலி, ஹிரண்யகசிபு கதையை ட்விஸ்ட் செஞ்சதா நினைக்கறது ட்விஸ்ட் கிடயாதுஅதெல்லாம் உண்மையா நடந்த சம்பவங்கள்தான்.  அத தெரிஞ்சவங்க இப்ப யாருமே உயிரோட இல்ல உங்களத் தவிர.  அத இப்ப என் உள்ளே புகுத்திட்டீங்க.  என்னோட மன நிம்மதியே போச்சு.

இங்க கேரளாவுல மஹாபலி யாருன்னு உங்களுக்குத் தெரியுமாஅவர இங்க விஷ்ணு பக்தனாக, விஷ்ணுவின் நெற்றியிலுள்ள நாமத்தை இவருக்கும் போட்டு, பெரிய வயிரோட, ஓணம் ஸீஸன்ல ரோட்ல, பனை ஓலை குடையோடு நடக்கவிட்டு, வியாபர நோக்கத்தோட ஏதாவது ஒரு பிரபலமான காமெடி நடிகர், இன்னொஸென்ட்னு பேரு,, கேள்விப்பட்டிருப்பீங்கல்ல, அவரோட குரல்ல பேசவிட்டு கேரள மக்களை சந்தோஷப்படுத்தற ஒருவரா மாத்தியிருக்காங்கஇவர வாமனன் ஏமாத்தி கீழுலகத்துக்கு அனுப்பினத பத்தி இந்த மக்களுக்கு யாருக்குமே எந்த வருத்தமும் கிடயாதுஅவங்கள பொருத்தவரைக்கும், மஹாபலி அன்பும், கருணையும் உள்ள ஒரு நல்ல அரசர் கிடயாது.  ஒரு அசுரன்அப்படித்தான் நம்பறாங்கவிஷ்ணு அவர தண்டிச்சதுனால விஷ்ணுவால ஆசிர்வதிக்கப்பட்ட ஒரு அசுரனாக நம்பறாங்க.

விஷ்ணு, மஹாபலிக்கு செஞ்ச கொடுமைக்காக, உங்க சீர்காழி சட்டநாத ஸ்வாமி விஷ்ணுவை பழி வாங்கியதெல்லாம் இந்த மக்கள் கேள்விப்பட்டது கூட கிடயாதுஉங்க சட்டநாதன் விஷ்ணுவைக் கொன்றதுக்கு அப்புறம் அவருடைய தோலை எடுத்து தன் மேல போட்டுக்கிட்டதுனாலதான் அவருக்கு சட்டநாதன்ன்ற பேரும் வந்துச்சுன்னு சொல்றதெல்லாம் இங்க யாருக்குமே தெரியாது.  ஏன் உங்க தமிழ் நாட்டுல உள்ளவங்களுக்குத் தெரியுமா?இரண்டு புராணங்களுமே தவறானபடி ஜோடிக்கப்பட்டிருந்தாலும் கேரள மக்களுக்குத் தெரிஞ்சது முதல் கதை தான்அதனால, கோதாவரி நிலத்துலருந்து வந்த ஒரு பிராமணத் துறவியான வாமனன் தான் மஹாபலியிடம் மூன்று வரங்களை வாங்கிக்கிட்டு அவர காட்டுக்கு அனுப்பினாருங்கறதை இவங்க ஏத்துக்க மாட்டாங்கஅதே மாதிரி, ஹிரண்யகசிபு அவரு மகன் ப்ரஹலாதன் கேட்டாங்கறதுக்காக தெரியாம ஒரு சிங்கத்தோட கூண்ட நொறுக்கப் போன சமயத்துல அந்தச் சிங்கம்தான் அவர கொன்னுச்சுங்கறதையும் ஏத்துக்க மாட்டாங்கவைஷ்ணவ குருமார்களோட பலியாடா இருந்த ப்ரகலாதனுக்கு இந்தச் சதி தெரியலஇந்த சம்பவங்கள்லாம் உண்மையா இருந்தாலும் கேரள மக்கள் நம்பமாட்டாங்ககேரளாவுல மிகப் பெரிய கவிஞரான ள்ளூர் பரமேஸ்வர ஐயர் கூட இதைப் பத்திக் கவிதையா எழுதி தோல்வியடைஞ்சாரு. இந்த மாதிரி விஷயங்கள சொல்லி மக்கள திசை திருப்ப முடியாதுஅதனால, மிஸ்டர் சிதம்பர நாதன் பிள்ளை, நீங்க இந்த மாதிரி மத சம்பந்தமான திருத்தங்கள செய்யறத நிறுத்திக்குங்கஇந்த மாதிரி விஷயங்களுக்கு இப்ப இந்த விஞ்ஞான உலகத்துல யாரும் மூளைய கசக்க விரும்பறது இல்ல.”

மறு நாள், நான் செய்தித் தாளைப் புரட்டும் போது, அந்த முட்டை ஏறியப்பட்ட சம்பவம் பற்றிய செய்தி வராதது கண்டு மிக ஆசுவாசமாக இருந்தது. ஆனால், தேசாபிமானி என்ற செய்தித் தாளில், சிந்து ஜார்ஜ் என்ற பெண் பத்திரிகையாளரின் விமர்சனம் பார்த்து மிகவும் ஏமாற்றம் அடைந்தேன்மூன்றே மூன்று ஆங்கிலப் படங்கள் தான் பட விழாவில் போட்டியிட்டன. அதில் ஒன்று எங்கள் படம்அந்தப் பத்திரிகையாளர், ஹிந்தி, அராபிக் படங்களைப் பற்றி எல்லாம் குறிப்பிட்டிருந்தார்ஆனால்,டிஸ்கைஸ்என்ற ஒரு ஆங்கிலப் படத்தைப் பற்றி மட்டும்தான் குறிப்பிட்டிருந்தார்எங்கள் மஹாமுடி ஆங்கிலப் படவரிசையில் கூட எடுத்துக் கொள்ளப்படவில்லை.

மிஸ்டர் பிள்ளை, பாருங்க எவ்வளவு பரிதாப கரமான நிலை நம்முடைய படத்துக்குனு.  அது மட்டுமா? அவங்க சலிக்க வைக்கும் வசனங்களும், மிகவும் மோசமா படம் பிடிக்கப்பட்ட சில படங்களும் போட்டியிட வந்ததில் வருத்தம்னு தெரிவிச்சுருந்தாங்க.  இந்த சிந்து ஜார்ஜ் யாருனு தெரியுமாபிரபலமான ஒரு விமர்சகர்புரட்சிகரமா கவிதை எழுதக்கூடிய கவிஞர் ஜார்ஜினுடய மகள். அப்படிப்பட்ட ஒரு விமர்சகருக்கு, ண்ணு இந்தப் படம் புரிஞ்சுக்கமுடியாத ஒண்ணா இருந்திருக்கலாம் இல்லனா இதப் பத்தி நல்லதாச் சொல்ல அவர் விரும்பல.  ஒருவேள அவங்க செலக்டிவாக சில படங்களை மட்டும் பாத்து விமர்சனம் எழுதி இருக்கலாம். அதனால இதுலருந்து என்ன தெரியுதுனா, இத மாதிரி செலவுமிக்க ரிஸ்க் எடுக்க கூடாதுனு தெள்ளத் தெளிவா தெரியுது.  நான் இனிமே இந்த மாதிரியான தப்பெல்லாம் செய்யக் கூடாதுனு தீர்மானிச்சுட்டேன்அதனால என்ன விட்டுருங்கநீங்க இந்த அனுபவத்துக்கு அப்புறமாவும், இதே மாதிரி ரிஸ்க் திரும்பவும் எடுக்கணும்னு நினச்சீங்கன்னா, ராஜேஷ் பண்டிட்ட போய் பாருங்கஅவர பத்திதான் இப்ப இண்டஸ்ட்ரில அதிகமா பேசிக்கறாங்கதன்னோட முதல் படத்துலயே ஒரு புரட்சிய ஏற்படுத்தினவருஅதனால அவர் உங்களுக்கு ஹெல்ப் பண்ணுவாரு. (ஸாரி, ரெண்டாவது படம் எடுத்ததும், அது ஓடாம போனதும் ஆளையே காணோமாம்.  அதும் நல்லதுதான்.  இப்ப ஆளு ஃப்ரீதான்.).  என்னைய தொந்தரவு பண்ணாதீங்க ப்ளீஸ்.  என்னைய தனியா விட்ருங்கமிஸ்டர் சீர்காழி சிதம்பரநாதன் பிள்ளை, ஆம் ஸாரி, கான்ட் ஹெல்ப் யு.”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக